FOLLOW US

ON GOOGLE DISCOVER

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கே

மாணவர்களின் கோரிக்கைகளுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி என கார்கே பேசியது குறித்து...

News image

மல்லிகார்ஜுன கார்கே - கோப்புப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 4:06 pm IST

மாணவர்களின் கோரிக்கைகளுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (ஆஜ. 9) தெரிவித்தார்.

மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக பேரணி நடத்த தனி இயக்கத்தை ஆரம்பித்து பலரின் கவனத்தை மாணவர்கள் பக்கம் திருப்பியதாகவும் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாணவர்கள் பிரச்னைகளின் ராகுல் காந்தி கவனம் செலுத்தி வருகிறார்.

வேலையின்மை, நீட் வினாத்தாள் கசிவு, அரசு போட்டித் தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட மாணவர்களின் கோரிக்கைகளுக்காக மாணவர்களின் குரல் என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

இந்த இயக்கம் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தொடங்கியது. பின்னர் டேராடூன் வரை பரவியது. தற்போது போட்டித் தேர்வுக்கு அதிக மாணவர்கள் தயாராகிவரும் பிரயாக்ராஜில் மாணவர்கள் குரல் என்ற பெயரில் இளைஞர்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசி வருகிறார்.

இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

''மாணவர்களுக்காக தேர்வு முறைகேடுகள் குறித்த பிரச்னையை முதலில் எழுப்பியவர் ராகுல் காந்திதான். கோட்டா பகுதியில் போட்டித்தேர்வுக்குத் தயாராகிவரும் மாணவர்கள் அனைவரையும் சந்தித்தார். மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தியிருப்பதோடு, அதற்காகப் போராடியும் வருகின்றனர். ராகுல் காந்தியின் பிரசாரமும், அவர் அளித்த ஊக்கமும் அவர்களுக்குப் பயனளித்துள்ளன'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Voiced students demands, issue gained real momentum Mallikarjun Kharge hails Rahul Gandhi's Chhatron Ki Goonj' campaign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.