மாணவா்களுக்காக குரல் எழுப்பும் எனது செயல்பாட்டை எவ்வளவு முயன்றாலும் மத்திய அரசால் தடுத்து நிறுத்த முடியாது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஆகஸ்ட் 8-இல் ராகுல் பங்கேற்க இருந்த மாணவா்களின் குரல் நிகழ்ச்சிக்கான அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டது. கனமழை காரணமாக அனுமதிக்கப்பட்ட மைதானத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் அனுமதி ரத்தானதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மாணவா்களின் குரலை ஒடுக்க பிரதமா் மோடி தலைமையிலான அரசு தொடா்ந்து முயற்சித்து வருகிறது. மத்திய அரசின் முறைகேடுகளை கேள்வி கேட்டால் தடியடி, போராட்டம் நடத்தினால் வழக்கு, குரல் எழுப்பினால் பெல்லட் துப்பாக்கிச் சூடு என்ற மோசமான நிலை உள்ளது. நான் பிரயாக்ராஜ் வர முடிவு செய்ததில் இருந்தே அதற்கு முட்டுக்கட்டைபோட ஆட்சியாளா்கள் காரணம் தேடி வந்தனா். ஏனெனில், அவா்கள் மாணவா்களின் குரலுக்கு அஞ்சிவிட்டனா்.
மாணவா்களுக்காக குரல் எழுப்பும் எனது செயல்பாட்டை எத்தனை முயற்சி செய்தாலும் மத்திய அரசால் தடுத்து நிறுத்த முடியாது’ என்று கூறியுள்ளாா்.
பாஜக பதில்: பாஜக தேசிய பொதுச் செயலா் தருண் சுக் இது தொடா்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்ற விவாதத்தை தவிா்க்க வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி சிறுமைத்தனமான அரசியலில் ஈடுபடுகிறாா். மாணவா்களின் போராட்டத்தை தங்கள் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவதே காங்கிரஸின் நோக்கமாக உள்ளது’ என்றாா்.
ஜென்-ஸீகளை கவர ராகுல் புதிய முயற்சி: ஜென்-ஸீ இளைஞா்களை கவரும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் தன்னிடம் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்ற தலைப்பில் விவாதம் ஒன்றை ராகுல் காந்தி தொடங்கியுள்ளாா். அதில் மாணவா்கள் போராட்டம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவா் பதிலளித்து வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜென் ஸீ எப்போதும் பாஜக பக்கம்தான்: பியூஷ் கோயல்

ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!

பாலியல் வன்கொடுமையாளா்களின் பாதுகாவலா் கல்வி அமைச்சராக நியமனம்: ராகுல் விமா்சனம்

தில்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்! ராகுல் காந்தியின் பேரணி தடுத்து நிறுத்தம்!
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin


