மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
/

ஜென் ஸீ எப்போதும் பாஜக பக்கம்தான்: பியூஷ் கோயல்

இளைஞர்களிடையே பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பதால் ராகுல் காந்தி அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

News image

பியூஷ் கோயல்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 3:58 pm IST

இளைஞர்களிடையே பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பதால் ராகுல் காந்தி அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பியூஷ் கோயல் இன்று செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, “பாஜக எப்போதும் இளம் வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. ஜென் ஸீ தலைமுறையினர் எப்போதும் எங்கள் பக்கமே உள்ளனர்.

இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்றும் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இளைஞர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரிப்பதாலும், இளைஞர்களுடன் அவர் தன்னை இணைத்துக் கொள்ளும் விதத்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். ராகுல் காந்தி தன்னை இளைஞர்களுக்கான தலைவர் என்று நினைக்குக் கொண்டிருந்தார். ஆனால், அவர் பிரதமர் மோடியைப் போன்று பிரபலமானவர் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது" என்றார்.

புது தில்லியில் நடைபெற்ற இளைஞர் போராட்டங்களால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த கோயல், வினாத்தாள் கசிவு விவகாரத்தை மத்திய அரசு கையாண்ட விதம் பற்றி ஆதரித்துப் பேசியதோடு, மோடியின் தலைமையிலான அரசு கடுமையான சட்டங்களை இயற்றியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், 2010-11 ஆம் ஆண்டில் வினாத்தாள் கசிவுகள் தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சட்டம் இயற்றத் திட்டமிட்டு, அதை அறிமுகப்படுத்தத் துணிச்சலற்று இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோடி தலைமையிலான அரசு 2024-ல் இதற்கென சட்டத்தை இயற்றி, பின்னர் அதை வலுப்படுத்தும் விதமாக விரைவான நீதிமன்ற விசாரணைகள் மற்றும் கடுமையான தண்டனைக்கு வழிவகுக்கும் திருத்தங்களைக் கொண்டு வந்தது என்றார்.

சட்டத்திருத்தம் தொடர்பான மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சிகள் பற்றிப் பேசுகையில், ”மக்கள் அவர்களை மீண்டும் மீண்டும் நிராகரிப்பதால் அவர்களுக்கு ஏற்படும் ஏமாற்றத்தையும் விரக்தியையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தல்களிலும் தோற்று வருகின்றனர். மசோதா விவாதத்தின்போது, ​​அவர்கள் அதை ஆதரித்திருக்க வேண்டும். மசோதாவை எதிர்த்ததற்காக காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி போன்ற கட்சிகளை நான் கண்டிக்கிறேன்" என்று கோயல் பேசினார்.

பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா 2026,கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

Summary

Gen Z is always on the BJP's side: Piyush Goyal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.