நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புகுடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு
/

அபிஜீத் தீப்கேவுக்கு சிக்கல்.. அமெரிக்காவில் படிக்க பணம் வந்தது எப்படி? ஆர்டிஐ-யின் கீழ் கேள்வி!

அபிஜீத் தீப்கேவுக்கு வெளிநாட்டில் படிக்க பணம் வந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ-யின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

அபிஜீத் தீப்கே. - (கோப்புப் படம்)

Updated On :2 ஆகஸ்ட் 2026, 2:40 pm IST

அபிஜீத் தீப்கேவுக்கு வெளிநாட்டில் படிக்க பணம் வந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ-யின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மே மாதம் வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், “வேலையில்லாத இளைஞர்களையும் இணையதள விமர்சகர்களையும் கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள்” என்று ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், இளைஞர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அபிஜீத் திப்கே என்ற இளைஞர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற ஐடி ஓபன் செய்திருந்த நிலையில், அதனை கட்சியாகவும் பதிவு செய்தார். இதற்கு இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

வேலைக்குச் செல்லாத, செல்லும் இளைஞர்கள் என அனைவரிடத்திலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டி, ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்காவிலிருந்த அபிஜீத் தீப்கே திடீரென இந்தியா வந்தார். அபிஜீத் தீப்கே புணேவில் இதழியல் இளங்கலைப் பட்டமும், அமெரிக்காவில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புத்துறையில் முதுகலை அறிவியல் பட்டமும் பயின்றுள்ளார்.

இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர். மேலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய அமைச்சர் பிரதானும் பதவியிலிருந்து விலகினார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் வெற்றி பெற்ற நிலையில், கட்சியினரின் நீதிமன்ற செலவினங்களுக்கான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், ரூ. 1 கோடியை நிதியாக வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த அமித் திவாரி என்ற சமூக ஆர்வலர் ஒருவர், மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவின் பொருளாதார பின்னணி என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தீப்கேவை வெளிநாட்டில் படிக்க வைக்கும் அளவுக்கு அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவரின் தந்தை பகவான்ராவ் திப்கேவுக்கு எங்கிருந்து பணம் வந்தது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமின்றி, “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பதிவு செய்யப்படாத அமைப்பு. ஆனால், கட்சியாக செல்பட்டு வருகிறது. அந்த கட்சிக்கு சட்ட பாதுகாப்புக்காக ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியாக பதிவு செய்யப்படாத அமைப்பின் நிதி திரட்டுவது குறித்து முழுமையான விசாரணை வேண்டும்” என்று அமித் திவாரி குறிப்பிட்டுள்ளார்.

Summary

A Surat-based Right to Information (RTI) activist has sought a probe into the finances of Cockroach Janta Party (CJP) founder Abhijeet Dipke's father, questioning how the retired Maharashtra government employee funded his son's education abroad.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.