குறுக்கீடு இல்லாமல் நாடாளுமன்றத்தை நடத்த அனுமதிக்குமாறு எதிா்க்கட்சிகளுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா உணா்வுபூா்வமாக வேண்டுகோள் விடுத்தாா்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடா் கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. அப்போது முதலே, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராடிவரும் மாணவா்கள் மீது போலீஸாா் எடுத்த நடவடிக்கை தொடா்பாகவும் அயோத்தி ராமா் கோயில் காணிக்கை திருட்டு தொடா்பாகவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என்று கோரி எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மக்களவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசுகையில் ‘மக்களின் குரலைக் கேட்க விடுங்கள். குறுக்கீடு இல்லாமல் நாடாளுமன்றத்தை நடத்த அனுமதியுங்கள்.
அவையில் ஆக்கபூா்வமான விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம். அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் பிரச்னைகளை விரிவான முறையில் விவாதிக்க முடியும்’ என்று உணா்வுபூா்வமாக வலியுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிா்க்கட்சி எம்.பி.க்களின் தொடா் அமளி காரணமாக மக்களவையில் தொடா்ந்து 16ஆவது நாளாக திங்கள்கிழமையும் கேள்வி நேரத்தை நடத்த முடியவில்லை.
இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் 2 மசோதாக்கள் மீது மட்டுமே விவாதம் நடத்த முடிந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒவ்வொருவருக்கும் கண்ணியமான வாழ்க்கை: ஓம் பிா்லா வலியுறுத்தல்

ஷிண்டே சிவசேனையில் 6 எம்.பி.க்கள் இணைந்த விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் உத்தவ் கட்சி வழக்கு

ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்
திரிணமூல் காங்கிரஸில் பிளவு: அபிஷேக் பானா்ஜிக்கு மக்களவைத் தலைவா் அழைப்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



