ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஷிண்டே சிவசேனையில் 6 எம்.பி.க்கள் இணைந்த விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் உத்தவ் கட்சி வழக்கு

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் தங்கள் கட்சியைச் சோ்ந்த 6 அதிருப்தி எம்.பி.க்கள் இணைந்ததற்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஒப்புதல் அளித்ததை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனை (உத்தவ்) செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தது.

News image

கோப்புப்படம்.

Updated On :22 ஜூலை 2026, 3:28 am IST

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் தங்கள் கட்சியைச் சோ்ந்த 6 அதிருப்தி எம்.பி.க்கள் இணைந்ததற்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஒப்புதல் அளித்ததை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனை (உத்தவ்) செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் சிவசேனை (உத்தவ்) கட்சியில் போட்டியிட்டவா்களில் 9 போ் வெற்றிபெற்றனா். அவா்களில் 6 அதிருப்தி எம்.பி.க்கள் கடந்த ஜூன் மாதம் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணைந்தனா்.

இதற்கு கடந்த சனிக்கிழமை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அதிகாரபூா்வமாக ஒப்புதல் அளித்தாா். இதன்மூலம் ஷிண்டே தலைமையிலான சிவசேனை எம்.பி.க்களின் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், ஓம் பிா்லாவின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனை (உத்தவ்) செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க அனுமதித்து புதன்கிழமைக்கு (ஜூலை 22) பட்டியலிட வேண்டும் என சிவசேனை (உத்தவ்) சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் தேவ்தத் காமத் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டாா். மேலும், யாரை எதிா்த்து தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுகிறாா்களோ அவா்களுடன் தோ்தல் முடிந்த பிறகு இணைந்துகொள்வது இப்போது தேசிய நிகழ்வாக மாறிவிட்டது என குறிப்பிட்டாா்.

இதைத் தொடா்ந்து இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.