நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

ராமர் கோயில் நன்கொடை முதல் மாணவர் போராட்டம் வரை எதிர்க்கட்சிகள் போராட்டம் பற்றி..

News image

எதிர்க்கட்சிகள் போராட்டம் - X

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:07 pm IST

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு, ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் எம்பி. பிரியங்கா காந்தி, சமாஜவாதி கட்சி எம்பிக்கள் அகிஷேஸ் யாதவ், டிம்பிள் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும், அதேவேளையில் சமீபத்தில் போராட்டங்களின்போது மாணவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இவ்விரு விவகாரங்கள் குறித்து மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புவதாகவும், ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து பதிலளிக்க விரும்பவில்லை என்றும் சமாஜவாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் குற்றம் சாட்டினார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, சமீபத்திய போராட்டங்களின்போது குறைந்தது 10 மாணவர்கள் பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் காயமடைந்துள்ளனர். ஆனால், பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது முற்றிலும் முரணாக உள்ளது. இதன்மூலம் அரசு பொய் கூறுவது நிரூபணமாகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நன்கொடை முறைகேடு விவகாரம் குறித்து அவைக்குள் விவாதம் நடைபெற வேண்டும். ஏனெனில் இது நமது இந்திய நாகரிகம் மற்றும் நம்பிக்கையுடன் தொடர்புடைய ஒரு விஷயமாகும்.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், ராமர் கோயில் நன்கொடைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளுக்கு முக்கிய விவகாரமாக இருந்து வருகின்றன. பக்தர்களின் காணிக்கைகள் கையாளப்படுவதில் கூடுதல் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களின் மீதான காவல் துறையின் நடவடிக்கையை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று டிம்பிள் யாதவ் விமர்சித்தார்.

Opposition MPs, including Congress MP Priyanka Gandhi Vadra and Samajwadi Party MPs Akhilesh Yadav and Dimple Yadav, staged a protest in the Parliament complex.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.