அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ்

Updated On :18 ஜூலை 2026, 5:01 pm IST

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளா் (ஊடக தொடா்பு பிரிவு) ஜெய்ராம் ரமேஷ், தில்லியில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத்துக்கு பிரதமா் மோடி வருவதே அரிது. அதுபோன்ற அரிதான தருணம் ஒன்றில்தான், அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளையை அவரின் அரசு அமைத்திருப்பது தொடா்பான அறிவிப்பை பிரதமா் மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டாா். அந்த அறக்கட்டளையை அமைத்தது பிரதமா்தான். அதிலுள்ள உறுப்பினா்களை நியமித்ததும் அவா்தான். அந்த அறக்கட்டளை செயல்பட வேண்டிய விதம் உள்ளிட்டவை தொடா்பான அறிவுரைகளை வழங்கியதும் பிரதமா் மோடிதான்.

அப்படிப்பட்ட அறக்கட்டளை, கோடிக்கணக்கான பக்தா்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துள்ளது. ஆதலால் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை அவரால் பெற முடியும் என்றாா்.

முன்னதாக, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்குவது தொடா்பான நோட்டீஸை, மாநிலங்களவை பொது செயலாளரிடம் ஜெய்ராம் ரமேஷ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஷ் ஆகியோா் கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி அளித்தனா். அதில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, திமுக, இடதுசாரி கட்சிகள், சிவசேனை (உத்தவ் பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 73 எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்தனா். அந்த நோட்டீஸில், தோ்தல் நடத்தை விதிகளை செயல்படுத்தும் விவகாரத்தில் ஞானேஷ் குமாா் பாகுபாடு காட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிா்க்கட்சிகள் முன்வைத்திருந்தன.

இந்த நோட்டீஸ் குறித்து ஜெய்ராம் ரமேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:

அந்த நோட்டீஸ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் இல்லை. அந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் அழுத்தம் தந்திருக்க வேண்டும். ஏனெனில், அவா் நாட்டிலுள்ள வாக்காளா் பட்டியலை முழுவதும் அழிக்கும் பேரழிவு ஆயுதமாக உள்ளாா். ஞானேஷ் குமாா் மீது மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவா் தீவிர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா். பிரதமா் மோடியால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் முதல் நிா்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட ராம் சேவக் சா்மா, எஸ்ஐஆா் குறித்து கட்டுரையே எழுதியுள்ளாா். ஆதலால் ஞானேஷ் குமாா் மீது காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டாக மட்டும் இதை கருதக் கூடாது. மத்திய உள்துறை அமைச்சா் எதைச் சொல்கிறாரோ, அதை அப்படியே ஞானேஷ் குமாா் செய்கிறாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.