ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

10,000 பேருக்கு வேலைவாய்ப்பு... இளைஞர்களிடம் விவரங்களைக் கேட்கும் பிரசாந்த் கிஷோர்!

பங்கிப்பூரைச் சேர்ந்த 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக பிரசாந்த் கிஷோர் உறுதியளித்துள்ளதைப் பற்றி...

News image

பிரசாந்த் கிஷோர்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 9:46 pm IST

பங்கிப்பூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் மாநிலங்களவை உறுப்பினராக ஆவதற்கு தனது பங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். அதன் விளைவாக அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

பிகாரில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.

சமீபத்தில், பிகாரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜின் கட்சி வேட்பாளர்கள் பலரும் வைப்புத் தொகையை இழந்தனர். ஆனால், அந்தத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடாத நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட்டு 31 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்த பங்கிப்பூரில் பாஜகவின் நீரஜை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தார் பிகே.

இந்த நிலையில், அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் 10,000 இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உதவுவதாக பங்கிப்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ. பிரசாந்த் கிஷோர் உறுதியளித்துள்ளார். மேலும், படித்திருந்தும் வேலையில்லாமல் இருக்கும் தங்கள் பிள்ளைகளின் சுயவிவரங்களையும் தனக்கு அனுப்பி வைக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “என்னால் அரசு வேலைக்கு உறுதியளிக்க முடியாது. தகுதியுள்ள இளைஞர்கள் தனியார் துறையில் வேலைகளைப் பெற உதவுவேன். ஆனால், இளைஞர்கள் பிகாரிலிருந்து வெளியே சென்று வேலைப்பார்க்க வேண்டும். பிகாரில் ஜன்சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் நிலைமையே மாறக்கூடும்” எனத் தெரிவித்தார்.

வேலைவாய்ப்புகளைத் தவிர்த்து தரமான கல்வி, மாதந்தோறும் ரூ.1,100 ஓய்வூதியம் மற்றும் உணவு தானியங்கள் ஆகியவைகள் வழங்குவதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Summary

Prashant Kishor asked Bankipur families to send CVs of educated unemployed youths to his office. He said he would use his network to help 10,000 families find private-sector jobs over the next two years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.