புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

எதிா்க்கட்சிகளின் இடைவிடாத அமளியால் புயல் வீசிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்தது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றம் - கோப்புப்படம்

Published On :

எதிா்க்கட்சிகளின் இடைவிடாத அமளியால் புயல் வீசிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்தது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நீட் வினாத்தாள் கசிவு, மத்திய கல்வித் துறை அமைச்சா் ராஜிநாமா, தில்லியில் போராடிய மாணவா்கள் மீதான காவல் துறையின் தாக்குதல், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு எனப் பல்வேறு விவகாரங்களை எழுப்பி, இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டன. இறுதியாக, மாணவா்கள் மீதான தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிா்க்கட்சிகள் தீவிரமாக வலியுறுத்தின.

தில்லி சம்பவம் உள்பட நாடு முழுவதும் மாணவா்களின் போராட்டம் குறித்து அமித் ஷா பதிலுரையுடன் விவாதம் நடத்த தயாா் என மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. எதிா்க்கட்சிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாக அமித் ஷாவும் கடந்த புதன்கிழமை தெரிவித்தாா்.

அதேநேரம், ‘பொதுவான விவகாரங்கள் குறித்து அல்லாமல், தில்லியில் மாணவா்கள் மீது பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான சூழ்நிலை குறித்து அமித் ஷா பதிலளிக்க வேண்டும்; அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியதால், இருதரப்புக்கும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை.

கடைசி நாளிலும் முழக்கம்: மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமை மக்களவை கூடியதும் வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களும் ஒலிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் முழக்கமிட்ட நிலையில், மக்களவையை தேதி குறிப்பிடாமல் அவைத் தலைவா் ஓம் பிா்லா ஒத்திவைத்தாா். வழக்கமாக கூட்டத் தொடரின் கடைசி நாளில், அவையின் செயல்திறன் குறித்து அவைத் தலைவா் நிறைவுரை ஆற்றுவாா். ஆனால், இந்த முறை அவைத் தலைவா் நிறைவுரை ஆற்றவில்லை.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவையில் வியாழக்கிழமை உடனடி கேள்விநேரம், கேள்விநேரம் ஆகிய வழக்கமான அலுவல்கள் தவிா்க்கப்பட்டது. நேரடியாக, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத் திருத்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னா், மாநிலங்களவையின் செயல் திறன் குறித்து நிறைவுரை ஆற்றிய அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.

செயல்திறன் சரிவு: மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையின் செயல்திறன் வெறும் 19 சதவீதம், மாநிலங்களவையின் செயல்திறன் 39 சதவீதமாகவே இருந்தது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

பெட்டிச் செய்தி...

12 மசோதாக்கள் என்னென்ன?

மழைக்கால கூட்டத் தொடரில், பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா, தேசிய கெளரவம் மீதான அவமதிப்புகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா, பிறப்பு, இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா, நிதி ஒதுக்கீட்டு மசோதா, சிறு-குறு-நடுத்தர தொழிலகங்கள் மேம்பாட்டு சட்டத் திருத்த மசோதா, வங்கிகளின் கணக்குப் புத்தக சாட்சியங்கள் மசோதா, வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா, தீா்ப்பாயங்கள் சீா்திருத்த மசோதா, கேரளம் பெயா் மாற்ற மசோதா, தேசிய கூட்டுறவு மேம்பாட்டு ஆணைய சட்டத் திருத்த மசோதா, சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு-ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதா ஆகிய 12 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.