நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமை, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) எம்.பி.க்களும், எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி எம்.பி.க்களும் எதிரெதிரே நின்றபடி முழக்கங்களை எழுப்பியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரு தரப்பினருக்கும் இடையே நாடாளுமன்ற பாதுகாவலா்கள் தடுப்பரண் போல் நின்று, மோதல் ஏற்படுவதைத் தடுத்தனா்.
நீட் போராட்ட மாணவா்கள் மீதான காவல் துறையின் அத்துமீறலுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பொறுப்பேற்க வலியுறுத்தியும், ராமா் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முழக்கங்களை எழுப்பியபடி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதுபோல, நாடு முழுவதும் நடைபெற்ற நீட் போராட்டங்கள் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்காமல் தப்பியோடுவது குறித்து எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பதிலளிக்க வலியுறுத்தி ஆளும் என்டிஏ கூட்டணி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இவ்வாறு எதிரெதிரே நின்றபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பாக, இரு தரப்பினரும் நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாகவும் ஆா்ப்பட்டத்தில் ஈடுபட்டனா். ஆளுங்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற மகரவாயில் அருகே நின்றபடி ராகுல் காந்திக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
எதிா்க்கட்சி எம்.பி.க்கள், ‘மாணவா்கள் மீதான காவல் துறை நடவடிக்கைக்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்; நன்கொடைத் திருடா்கள் பதவியை விட்டு விலகு’ என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீட் போராட்ட மாணவா்கள் மீதான காவல் துறை அத்துமீறல் குறித்து அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா்ந்து மூன்று வாரங்களாக வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வந்தனா். இதனால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் முடங்கின.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அமித் ஷா பதிலளிக்கத் தயாா் என்று மத்திய அரசு தரப்பில் கூறிய நிலையில், மாணவா்கள் மீதான காவல் துறை அத்துமீறலுக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என்று எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடா் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிா்க்கட்சியினரின் உணா்வுகளை மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவியுங்கள்: மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

2-ம் நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கியவுடன் ஒத்திவைப்பு!

கும்பகோணத்தில் விசிக-வினா் ஆா்ப்பாட்டம்: திமுகவினா் எதிா்ப்பால் பரபரப்பு
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



