மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல்: கைதான நபருக்கு போலீஸ் காவல்

சுக்பீர் சிங் தாக்கப்பட்ட வழக்கில் கைதான நபருக்கு போலீஸ் காவல் விதித்திருப்பது பற்றி...

Sukhbir Singh Badal

சுக்பீர் சிங் பாதல் - கோப்புப்படம்

Published On :

சுக்பீர் சிங் பாதல் தாக்கப்பட்ட வழக்கில் கைதான ஜஸ்பால் சிங்கை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜஸ்பால் சிங் பிற்பகல் 4 மணியளவில் முத்கேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஜஸ்பால் சிங்கை, சம்பவ இடத்திலேயே போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர்.

அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டபோதிலும், இந்தத் தாக்குதலுக்கான உறுதியான காரணம் எதையும் போலீஸாரால் இன்னும் கண்டறிய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிரத்தின் நாந்தேடிலுள்ள பிரபல மாதா சாஹிப் தேவன் ஜி முகத் எனும் சீக்கிய கோயிலில், கடந்த வியாழக்கிழமை (ஆக. 13) பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும், ஷிரோமனி அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல் சென்றார்.

அப்போது, அங்கு காவலில் ஈடுபட்டிருந்த நிஹாங் எனும் பாரம்பரிய சீக்கிய காவல் படையைச் சேர்ந்த ஒருவர் சுக்பீர் சிங் பாதலை கத்தியால் குத்தி தாக்கினார். இந்தத் தாக்குதலில், சுக்பீர் சிங் மற்றும் அவருடைய சிறப்புப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுக்பீர் சிங் பாதலுக்கு சுமார் 90 நிமிடம் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

இதன்மூலம், தாக்குதலில் பாதிக்கப்பட்ட அவரது கையின் தசைநார்கள் மற்றும் நரம்புகள் சரிசெய்யப்பட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சிகிச்சை முடிந்து சுக்பீர் சிங் வெள்ளிக்கிழமை பிற்பகல் பஞ்சாப் மாநிலத்துக்குப் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.

Summary

A court in the district on Friday remanded Jaspal Singh, arrested for allegedly attacking Shiromani Akali Dal chief Sukhbir Singh Badal, in police custody till August 24, an official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.