குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து!

குருத்வாராவுக்குள் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி...

News image

சுக்பீர் சிங் பாதல் - கோப்புப்படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:40 pm IST

மகாராஷ்டிரத்தில் உள்ள குருத்வாராவுக்குள் ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மிகவும் பிரபலமான நான்டெட்டில் உள்ள ஹசூர் சாஹிப் குருத்வாராவுக்கு இன்று காலை 11 மணியளவில் சுக்பீர் சிங் பாதல் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்து ஒருவர் சுக்பீர் சிங் பாதலை கத்தியால் குத்தியுள்ளார். இதில், அவருக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் சுக்பீர் சிங் பாதலின் சிறப்புப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, சுக்பீர் சிங் பாதலை பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

குருத்வாராவில் கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 2024-ல், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு வெளியே சுக்பீர் சிங் பாதல் மீது பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில், நூலிழையில் அவர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

Summary

Sukhbir Singh Badal stabbed inside Gurdwara in Maharastra

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.