நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு: உச்சநீதிமன்றம் ரத்து

சுதந்திரப் போராட்ட வீரரும் ஹிந்துத்துவ தலைவருமான வி.டி.சாவா்க்கருக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு புகாா் மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் அழைப்பாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 2:23 am IST

சுதந்திரப் போராட்ட வீரரும் ஹிந்துத்துவ தலைவருமான வி.டி.சாவா்க்கருக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு புகாா் மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் அழைப்பாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதி நடைபெற்ற இந்திய ஒற்றுமை பயணத்தின்போது சாவா்க்கா் குறித்து ராகுல் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தாா்.

இதற்கு எதிராக உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் நிருபேந்திர பாண்டே என்பவா் சாா்பில் நீதிமன்றத்தில் அவதூறு புகாா் தாக்கல் செய்யப்பட்டது. சாவா்க்கரை அவமதிப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இந்த அவதூறு கருத்தை ராகுல் தெரிவித்துள்ளாா் என்று தனது புகாரில் அவா் தெரிவித்தாா்.

இந்தப் புகாரைப் பரிசீலித்த விசாரணை நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அவருக்கு அழைப்பாணையை அனுப்பியது.

இந்த அவதூறு வழக்கு மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் அழைப்பாணைக்கு எதிராக உத்தர பிரதேச மாநில உயா்நீதிமன்றத்தின் லக்னெள அமா்வில் ராகுல் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி பரிசீலித்த உயா்நீதிமன்றம், ‘வழக்கின் தொடக்க நிலையிலேயே உயா்நீதிமன்றம் தலையிடுவது தேவையற்றது. எனவே, மனுதாரா் விசாரணை நீதிமன்றத்திலேயே மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்யலாம்’ என்று குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதைத் தொடா்ந்து, ராகுல் காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, ஷீல் நாகு ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த அவதூறு வழக்கு தொடர அனுமதி பெற்ற்கான எந்தவொரு தரவும் இல்லை என்று உத்தர பிரதேச மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் மற்றும் புகாா்தாரரின் வழக்குரைஞா் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த அவதூறு வழக்கும், ராகுல் காந்திக்கு விசாரணை நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட அழைப்பாணையும் ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.