தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கர்ரேகுட்டா மலையில் பெருமையுடன் பறக்கிறது மூவர்ணக் கொடி: அமித் ஷா

கர்ரேகுட்டா மலையில் இப்போது மூவர்ணக் கொடி பற்றி..

மூவர்ணக் கொடி

Published On :

நக்சல் தீவிரவாதத்தின் கோட்டையாகத் திகழ்ந்த கர்ரேகுட்டா மலையில் இப்போது மூவர்ணக் கொடி பெருமையுடன் பறப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவரின் எக்ஸ் தளப் பதிவில்,

கர்ரேகுட்டா மலையில் சுதந்திரத் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஒரு காலத்தில் துப்பாக்கிகள் முழங்கிய இடத்தில், இப்போது தேசபக்தி எதிரொலிக்கிறது. சிவப்பு மண்ணின் மீது மூவர்ணக் கொடி பறப்பது, நக்சல் அச்சுறுத்தல் இல்லாத புதிய பஸ்தார் பகுதியின் வலிமை, முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாகும்.

சத்தீஸ்கரின் மாவோயிஸ்ட் கோட்டைகளாகக் கருதப்பட்ட பகுதிகள் வழியாக சுமார் 600 கி.மீ. தூரம் மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் 'பஸ்தார் திரங்கா யாத்திரை', பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ரேகுட்டா மலைப்பகுதியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதோடு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இது அப்பகுதியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது.

இந்த யாத்திரை முழுவதும் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணியை சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா, வனத்துறை அமைச்சர் கேதார் காஷ்யப் ஆகியோர் வழிநடத்தினர். இவர்களுடன் மக்கள் பிரதிநிதிகள், உள்ளூர் மக்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் நீண்ட காலமாக மாவோயிஸ்டுகளின் வலிமையான மறைவிடமாகக் கருதப்பட்டதும், பாதுகாப்புப் படையினரின் தீவிர மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குக் களமாக அமைந்ததுமான கர்ரேகுட்டா மலைப்பகுதியே இந்த யாத்திரையின் இறுதி இலக்காக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.