ஹிமாசலில் தொடர் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹிமாசல் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் 118 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மாலை முதல் காங்க்ரா பகுதியில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. தர்மசாலாவில் 96.2 மி.மீ, பாலம்பூரில் 55 மி.மீ மற்றும் காங்க்ராவில் 34.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் தகவல்படி, மண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 48 சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக குலுவில் 32, சம்பாவில் 11, சிர்மௌரில் 8, சிம்லாவில் 7, காங்க்ராவில் 6, உனாவில் 4 மற்றும் லஹவுல், ஸ்பிதியில் தலா 2 சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மழை காரணமாக 216 குடிநீர் விநியோகத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 19 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 30 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை மொத்தம் 79 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், மாநிலத்திற்கு சுமார் ரூ.972 கோடி மதிப்பிலான இழப்பும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Summary
Torrential rains continued to disrupt normal life in Himachal Pradesh, with 118 roads blocked across the state as the India Meteorological Department issued an orange alert for heavy to very heavy rainfall at isolated places in five districts on Monday and Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் தொடரும் கனமழை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளம்: இடுக்கியில் நிலச்சரிவு; 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK




