ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

அமெரிக்க விசா நேர்காணல்: குழந்தைகளும் கட்டாயம் நேரில் வர வேண்டும்!

அமெரிக்க விசா நேர்காணலில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றம் பற்றி...

Change in US visa interview.

அமெரிக்க விசா நேர்காணலில் மாற்றம். - பிரதிப் படம்

Published On :

அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்புகளால் அமெரிக்க விசா நேர்காணலுக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க விசா நேர்காணலுக்கு பிறந்த குழந்தைகள் முதல் 17 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகள் நேரில் வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சிறுவர்களுக்கான அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கிறீர்களா? உங்கள் குழந்தை பிறந்த குழந்தையாக இருந்தாலும் சரி, அல்லது ஏறக்குறைய 18 வயதை எட்டியவராக இருந்தாலும் சரி, அவர்கள் தூதரக நேர்காணலுக்கு நேரில் ஆஜராக வேண்டும்.

இது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கான நினைவூட்டல். நேரில் நடைபெறும் தூதரக நேர்காணல் அனைத்து வயதினருக்கும் கட்டாயம் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதுகுறித்த விளக்க விடியோ ஒன்றும் அந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 14 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான விசா நேர்காணலில் பெற்றோர்கள் மட்டும் நேரில் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பித்து விசா பெற்றுவந்த நிலையில் இந்தத் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Summary

Changes to the rules for US visa interviews have been introduced following announcements by President Donald Trump.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.