இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!

ஒரு மாணவிக்கு மாதம் ரூ. 30 வீதம் ஆண்டுக்கு ரூ. 360 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Gujarat will provide free sanitary napkins for govt school girls

பள்ளி மாணவிகள் - ANI

Published On :

குஜராத் மாநிலத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மாணவிகளின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தவும், மாணவிகள் பள்ளிக்கு வராமல் இருப்பதைத் தவிர்க்கவும், வருகைப்பதிவை அதிகரிக்கவும் இந்த திட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது.

இதற்காக ஒரு மாணவிக்கு மாதம் ரூ. 30 வீதம் ஆண்டுக்கு ரூ. 360 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மாதந்தோறும் 10 லட்சம் மாணவிகள் இதன் மூலம் பயன்பெறவுள்ளனர்.

மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்க குஜராத் மாநில பள்ளிக் கல்வித் துறை ரூ. 46.68 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பிரத்யூமன் வாஜா, ரிவாபா ஜடேஜா ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மாதவிடாய் குறித்து மாணவிகள் தயக்கமின்றி வெளிப்படையாகப் பேசுவதற்கும் சானிடரி நாப்கின்கள் அனைத்து மாணவிகளுக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவும் பள்ளிகளில் ஆசிரியையை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாதவிடாய் சுகாதாரம் குறித்து மாணவிகளிடம் இருக்கும் தவறான புரிதல்களை மாற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வகுப்புகளை எடுக்கவும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி சானிடரி நாப்கின்களை அப்புறப்படுத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Gujarat will provide free sanitary napkins for govt school girls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.