FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்புரூ. 300 கோடியில் பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் விஜய் அறிவிப்பு! முதல்வர் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர்‘ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில்..’ தவெகவினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

‘ஜென் ஆல்பா போராட்டம்’... பன்னோக்கு பள்ளியை கேந்திரிய வித்யாலயாவுடன் இணைக்க மாணவர்கள் கடும் எதிர்ப்பு!

பன்னோக்கு பள்ளியை கேந்திரிய வித்யாலயாவுடன் இணைக்க மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதைப் பற்றி...

News image

மாநில பள்ளிகளை கேந்திரிய வித்யாலயாவுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 9:58 am IST

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் செயல் விளக்கப் பன்னோக்குப் பள்ளியை கேந்திரிய வித்யாலயாவுடன் இணைக்கும் திட்டத்துக்குப் பள்ளி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் செயல்முறை விளக்கப் பன்னோக்குப் பள்ளிகள் (Demonstration Multipurpose Schools) அஜ்மீர், போபால், புவனேஸ்வர் மற்றும் மைசூரு ஆகிய நான்கு நகர்களில் என்சிஇஆர்டி-ன் கீழ் 1965 ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் உள்ள பன்னோக்குப் பள்ளியை மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவுடன் இணைப்பது தொடர்பான திட்டத்தை மத்தியப் பிரதேச அரசு முன்மொழிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

டிஎம்எஸ் பள்ளிகளை கேந்திரிய வித்யாலயாவுடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து பள்ளி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பிய அவர்கள் பள்ளிக்கு வெளியே பேரணியாகவும் சென்றனர்.

மேலும், போராட்டத்தின் போது, பள்ளிக்கு வெளியே அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், தங்கள் கோரிக்கைகள் பரிசீலனை செய்யவில்லை என்றால், தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் எச்சரித்தனர்.

டிஎம்எஸ் மாதிரி பள்ளிகளை கேந்திரிய வித்யாலயாவுடன் இணைத்தால், டிஎம்எஸ் திட்டத்தின் நோக்கம் சிதைந்துவிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வினாத்தாள் கசிவால் மாணவர்கள் போராட்டம், ஜென்ஸீக்கள் போராட்டங்களால் நாடு முழுவதும் பல்வேறு பரப்பான சூழல் நடந்து ஓய்ந்திருக்கும் நிலையில், ஜென் ஆல்பாக்களின் போராட்டம் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Summary

Regional School students in Bhopal protested against the proposed merger with Kendriya Vidyalaya Sangathan and submitted a memorandum. They said the move could dilute the schools' experimental identity and warned of phased agitation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.