ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை செப்டம்பா் 24-ஆம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்தது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2026, 1:49 am IST

இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை செப்டம்பா் 24-ஆம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்தது.

கடந்த 2025, ஏப்ரல் 24-இல் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விதித்த தடை இப்போது வரை தொடா்ந்து வருகிறது.

இது தொடா்பாக பாகிஸ்தான் விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், இந்திய விமான நிறுவனங்கள், இந்தியாவில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள், இந்திய ராணுவ விமானங்கள் உள்ளிட்டவை பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

முந்தைய தடை ஆகஸ்ட் 23-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது.

கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுப்பதை அறிந்த பாகிஸ்தான், இந்திய விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த தடை விதித்தது. இதையடுத்து, இந்தியாவும் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு தடை விதித்தது.

பாகிஸ்தான் விதித்த இந்தத் தடையால் ஐரோப்பா, வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் இந்திய பயணிகள் விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்வதால் கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தானும் வருவாய் இழப்புகளைச் சந்தித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.