இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா, காங்ரா மாவட்டங்களில் மிதமான நிலநடுக்கம்

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மற்றும் காங்ரா மாவட்டங்களில் மிதமான தீவிரத்தன்மை கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் குறித்து...

Two moderate-intensity earthquakes jolted Chamba and Kangra districts

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா, காங்ரா மாவட்டங்களில் மிதமான நிலநடுக்கம் - கோப்புப்படம்

Published On :

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மற்றும் காங்ரா மாவட்டங்களில் அடுத்தடுத்து மிதமான தீவிரத்தன்மை கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்களிடையே அச்சம் நிலவியதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) வெளியிட்டுள்ள தகவலின்படி, சம்பா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6:54 மணிக்கு கரேரி பகுதிக்கு அருகில் பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது.

இதேபோன்று, அடுத்த 45 நிமிடங்களுக்குப் பிறகு, காங்ராவிலும் மிதமான தீவிரத்தன்மை கொண்ட மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவும் பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கங்கள் குறைந்த ஆழத்தில் ஏற்பட்டதால் அதிர்வுகள் நன்கு உணரப்பட்டதாகவும்; இதனால் அந்த பகுதிகளில் மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ, சொத்துகள் சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றன.

காங்ரா மற்றும் சம்பா மாவட்டங்கள் 'நிலநடுக்க மண்டலம் வி'-ன் கீழ் வருவதால் இது அதிக சேத அபாயம் கொண்ட மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Two moderate-intensity earthquakes jolted Chamba and Kangra districts of Himachal Pradesh, triggering panic among residents, officials said on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.