
குஜராத் கள்ளச் சாராய பலி 7 ஆக உயர்வு!
குஜராத் கள்ளச் சாராய பலி பற்றி..

கள்ளச் சாராய பலி - DIN
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பக பாவ்நகர் மண்டலக் காவல் துறைத் தலைவர் ஆர்.வி. அஸாரி கூறுகையில்,
குஜராத் மாநிலம் மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலமாகும். இங்கு மது உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. விஷச்சாராயம் அருந்தியதால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வர்தேஜ் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கராகடி கிராமத்தில், ரசாயனம் கலந்த மதுவை அருந்திய ஒருவர் உயிரிழந்தபோது, முதலில் தற்செயலான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர், 21 பேரை குற்றவாளிகளாகக் குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வழக்கை விசாரிக்க மாநிலக் கண்காணிப்புப் பிரிவின் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 12 பேர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள், பிரபலமான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது பிராண்டின் போலி பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்த விஷச்சாராயத்தை அருந்தியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோகா தாலுகாவின் கராகடி கிராமத்தில் நடைபெற்ற விருந்து ஒன்றில் சட்டவிரோத மதுவை அருந்திய ஐந்து நண்பர்கள் கொண்ட குழுவினர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகச் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கிடைத்தது.
பின்னர், பாவ்நகர் நகரத்திற்குள் உள்ள பிற கிராமங்கள் மற்றும் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாகப் பாவ்நகர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் குமார் தெரிவித்தார்.
இப்பாட்டில்கள் மத்தியப் பிரதேசத்திலிருந்து விநியோகிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, எவ்வாறு தயாரிக்கப்பட்டன, பவ்நகருக்கு அவற்றை அனுப்பியது யார் என்பது போன்றவை குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அதே பிராண்டைச் சேர்ந்த பல பாட்டில்கள் சட்டவிரோத மது விற்பனையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலியான மதுவை விநியோகிப்பதில் ஈடுபட்ட மற்ற விற்பனையாளர்களைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





