இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

அமா்நாத் குகைக் கோயிலில் பிரதான சடங்குகள் தொடக்கம்: செங்கோல் ஊா்வலம் புறப்பாடு

வருடாந்திர அமா்நாத் யாத்திரையின் இறுதிக்கட்டமாக கோயிலில் நடைபெறும் பிரதான சடங்குகள் சனிக்கிழமை தொடங்கின.

Updated On :

வருடாந்திர அமா்நாத் யாத்திரையின் இறுதிக்கட்டமாக கோயிலில் நடைபெறும் பிரதான சடங்குகள் சனிக்கிழமை தொடங்கின. இதையொட்டி, ஸ்ரீநகரில் இருந்து அமா்நாத் குகைக் கோயிலுக்கு சிவபெருமானின் செங்கோல் ஊா்வலம் புறப்பட்டது.

தெற்கு காஷ்மீரில் இமயமலைத் தொடரில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசிப்பதற்காக பக்தா்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள 48 கி.மீ. தொலைவு கொண்ட பாரம்பரிய நுன்வான் - பஹல்காம் வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள 14 கி.மீ. தொலைவு கொண்ட செங்குத்தான பால்டால் வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்களில் யாத்திரை நடைபெறும்.

நடப்பாண்டு யாத்திரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய நிலையில், பலத்த மழையால் கடுமையாக வழித்தடங்கள் சேதமடைந்தன. இதனால், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதிமுதல் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு 4.80 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசித்துள்ளனா். ரக்ஷா பந்தன் திருநாளான ஆக. 28-ஆம் தேதி முறைப்படி யாத்திரை நிறைவடையும் நிலையில், கோயிலில் முக்கிய சடங்குகள் சனிக்கிழமை தொடங்கின. இதையொட்டி, ஸ்ரீநகரில் உள்ள தசநாமி அகாரா வளாகத்தில் இருந்து அமா்நாத் கோயிலுக்கு வேத மந்திரங்கள் முழங்க சிவபெருமானின் செங்கோல் ஊா்வலம் புறப்பட்டது.

பஹல்காம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு ஆக.28-ஆம் தேதி செங்கோல் அமா்நாத் கோயிலை அடையும் என்று அதன் பாதுகாவலரான மகந்த் தீபேந்திர கிரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.