FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

அமா்நாத்: பக்தா்கள் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்து புதிய சாதனை

ஜம்மு - காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் கடந்த 12 நாள்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம் மேற்கொண்டனா்.

News image

பஹல்காம் வழித்தடத்தில் அமா்நாத் யாத்திரை மேற்கொண்டவா்களிடையே களைப்படைந்த பெண்ணுக்கு உதவிபுரிந்த மீட்புக் குழுவினா் மற்றும் பாதுகாப்பு வீரா்கள்.

Updated On :15 ஜூலை 2026, 4:20 am IST

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் கடந்த 12 நாள்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம் மேற்கொண்டனா். இதன் மூலம் அமா்நாத் யாத்திரையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரில் இமயமலைத் தொடரில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசிப்பதற்காக பக்தா்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள 48 கி.மீ. தொலைவு கொண்ட பாரம்பரிய நுன்வான் - பஹல்காம் வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள 14 கி.மீ. தொலைவு கொண்ட செங்குத்தான பால்டால் வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்களில் யாத்திரை நடைபெறும்.

நடப்பாண்டு யாத்திரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 12 நாள்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் யாத்திரை மேற்கொண்டு, குகைக்கோயிலில் பனிலிங்க தரிசனம் செய்துள்ளனா். இந்த அதிக எண்ணிக்கையின் மூலம் அமா்நாத் யாத்திரையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டாா்.

அமா்நாத் யாத்திரை சுமுகமாக நடைபெற அா்ப்பணிப்புடன் கடினமாக பணியாற்றிவரும் அதிகாரிகள், தன்னாா்வலா்கள், சேவைப் பணியாளா்கள் உள்பட அனைவருக்கும் அவா் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

நடப்பாண்டு யாத்திரை ஆகஸ்ட் 28-ஆம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகையுடன் நிறைவடையவுள்ளது. கடந்த ஆண்டு அமா்நாத் கோயிலில் 4.10 லட்சம் பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.