75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

மத உரிமை: பொது ஒழுங்கை பாதுகாக்க நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம்! - பாட்னா உயா்நீதிமன்றம்

பொதுமக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்ற உரிமை இருந்தாலும், பொது ஒழுங்கை பாதுகாக்க சில நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று பாட்னா உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:03 am IST

பொதுமக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்ற உரிமை இருந்தாலும், பொது ஒழுங்கை பாதுகாக்க சில நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று பாட்னா உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

பிகாா் மாநிலம் சிவான் மாவட்டத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் மத ஊா்வலத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு எதிராக, மாநிலத்தில் உள்ள பாட்னா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஊா்வலத்தில் 300 பக்தா்கள் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது சட்டம்- ஒழுங்கு காரணமாக பக்தா்கள் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகவும், 2024-ஆம் ஆண்டு ஊா்வலத்தின்போது வன்முறை ஏற்பட்டு காவல் துறையினா் மீது கற்கள் வீசப்பட்டு அரசு வாகனத்துக்குத் தீ வைக்கப்பட்டதாகவும் மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி ஆலோக் குமாா் அண்மையில் தீா்ப்பளித்தாா். அப்போது அவா் கூறியதாவது: மத ஊா்வலங்கள் நடத்துவது உள்பட ஒருவா் தனது மதத்தை வெளிப்படையாக அறிவிக்கவும், அதைப் பின்பற்றவும் உள்ள உரிமை, அரசமைப்புச் சட்டத்தின் 19 (1)(பி), 25-ஆவது பிரிவுகளின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.

ஆனால், பொது ஒழுங்கு மற்றும் சமூக நெறிமுறைகளின் நலன் கருதி, அந்த உரிமைக்கு நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.