FOLLOW US

ON GOOGLE DISCOVER

வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா மீண்டும் திறப்பு!குடும்பத்துடன் இறுதிநாள்கள்.. கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை! சூட்கேஸில் சடலம்! குற்றவாளிகள் இருந்த வீட்டில் பிரியாணி டபராவில் மனித உடல்! தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

டெலிப்ராம்ப்டர் இல்லாமல் தேசிய கீதத்தைப் பாடுங்கள்: பாஜக அமைச்சரவைக்கு காங்கிரஸ் சவால்!

டெலிப்ராம்ப்டர் இல்லாமல் தேசிய கீதத்தைப் பாடுங்கள் என பாஜக அமைச்சரவைக்கு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே சவால் விடுத்துள்ளது பற்றி...

Priyank Kharge

பிரியங்க் கார்கே. - படம் - ஏஎன்ஐ

Published On :22 ஆகஸ்ட் 2026, 12:01 pm IST

டெலிப்ராம்ப்டர் இல்லாமல் தேசிய கீதத்தைப் பாடுங்கள் என பாஜக அமைச்சரவைக்கு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே சனிக்கிழமை (ஆக. 22) சவால் விடுத்துள்ளார்.

தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்ததாக பாஜக குற்றம் சாட்டியது. 

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை (ஆக. 19) நடைபெற்றது. இனிவரும் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளில், வந்தே மாதரம் பாடலை முழுவதும் பாடாமல் இரு சரணங்கள் மட்டுமே, பாடுவதென்று முடிவு எடுக்கப்பட்டது. 

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பேசியதாவது:

”ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம், வேலையில்லா பிரச்னை மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற விவகாரங்களிலிருந்து திசை திருப்பவே, பாஜக தலைவர்கள் வந்தே மாதரம் தொடர்பாக பேசி வருகின்றனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 98 ஆக உள்ளது.

நாம் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டோம். அதன்படி, ரூ. 50,000 கோடி பொருள்களை அமெரிக்காவிடமிருந்து நாம் வாங்க வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் திசை திருப்புவதற்கான முயற்சிதான் இது.

வந்தே மாதரத்தைப் பற்றி நமக்குச் சொல்ல இவர்கள் யார்? அவர்கள் உண்மையான தேச பக்தர்களாக இருந்தால், நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் நாக்பூருக்குச் சென்று, அங்கு ஆர்எஸ்எஸ் பாடல்கள் பாடப்படுவதை நிறுத்த வேண்டும். மேலும், இனிமேல் அனைத்து ஆர்எஸ்எஸ் நிகழ்வுகளிலும் வந்தே மாதரம் பாட வேண்டும் என்பதை மோகன் பகவத்திடம் கூற வேண்டும்.

டெலிப்ராம்ப்டர் இல்லாமல், தேசிய கீதத்தைப் பாடுங்கள் என பாஜக அமைச்சரவை முழுவதுக்கும் நான் சவால் விடுக்கிறேன். அப்படி அவர்கள் பாடிவிட்டால் நான் ராஜிநாமா செய்வேன் என்று பிரியங்க் கர்கே தெரிவித்துள்ளார்.

Summary

Karnataka Minister Priyank Kharge challenged the BJP cabinet on Saturday (Aug. 22) to sing the national anthem without a teleprompter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.