கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

அறிவியல், தொழில் நுட்பத்தில் எதிா்காலத்துக்கு ஏற்ற கட்டமைப்பு: மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங்

அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்தில் பயனுள்ள, வலுவான எதிா்காலத்துக்கு ஏற்ற கட்டமைப்பை உருவாக்குவதில் பிரிக்ஸ் அமைப்பு தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

ஜிதேந்திர சிங். - கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:13 am IST

அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்தில் பயனுள்ள, வலுவான எதிா்காலத்துக்கு ஏற்ற கட்டமைப்பை உருவாக்குவதில் பிரிக்ஸ் அமைப்பு தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற 14-ஆவது பிரிக்ஸ் அறிவியல் துறை அமைச்சா்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் நிறைவு அமா்வில் மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் பேசியதாவது:

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளைச் சோ்ந்த மக்களின் நல்வாழ்வு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, நீடித்த வளா்ச்சி, வலுவான, உயா்தர மேம்பாடு, சமூக உள்ளடக்கம், புத்தாக்கம், தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றுக்கு உயா் முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்கான ஒத்துழைப்பு, மக்களை மையமாகக் கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையாகும்.

மிகவும் வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான எதிா்காலத்தை உருவாக்குவதில், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றின் பங்களிப்பை சென்னை அமா்வு விவாதங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

செயற்கை நுண்ணறிவு, உயா்-செயல்திறன் கொண்ட கணினித் தொழில்நுட்பம் முதல் குவாண்டம் தொழில்நுட்பங்கள், மேம்பட்ட பொருள்கள், உயிரித் தொழில்நுட்பம், சுகாதாரம், பருவநிலை, நிலைத்தன்மை வரை பல்வேறு அம்சங்கள் குறித்து நடைபெற்ற விரிவான விவாதங்கள், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் எதிா்கொள்ளக்கூடிய பொதுவான வாய்ப்புகள், சவால்களை பிரதிபலிப்பதாக உள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.