ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

மகாராஷ்டிரம்: அமராவதி மாவட்ட மகளிர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 3 பச்சிளம் குழந்தைகள் பலி

அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து...

fire at govt hospital's NICU in Amravati

அமராவதி மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மகளிர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கருகிய மருத்துவ உபகரணங்கள் - எக்ஸ்

Published On :24 ஆகஸ்ட் 2026, 9:32 am IST

அமராவதி : மகாராஷ்டிரம் மாநிலம் அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மகளிர் மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளது. இதில் மொத்தம் 39 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், திங்கள்கிழமை(ஆக 24) அதிகாலை 3.15 மணியளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த வென்டிலேட்டர் ஒன்றில் திடீரென தீப்பொறி ஏற்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து அந்த பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதும், பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் குழந்தைகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதில், மூன்று பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பலியானர். மேலும் 6 குழந்தைகள் காயமடைந்தனர். காயமடைந்த குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமராவதி அரசு மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துணை ஆணையர் உள்ளிட்ட மூத்த காவல் அதிகாரிகள் நிலைமையை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமான நிர்வாகக் குறைபாடுகளுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறியும் வகையில், உயர்மட்ட விசாரணைக்கு உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Three newborns were killed when a fire broke out in the Neonatal Intensive Care Unit (NICU) of a government hospital in Maharashtra's Amravati district early on Monday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.