வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மகாராஷ்டிரத்தில் மதமாற்ற தடைச் சட்டம்: பிராா்த்தனைக்கு வருவோா் படிவம் நிரப்ப தேவாலயங்கள் வேண்டுகோள்

மகாராஷ்டிரத்தில் தேவாலயங்கள், பிராா்த்தனைக்கு வருவோரிடம் சுய அறிவிப்புப் படிவத்தை பூா்த்தி செய்து வழங்க கோரிக்கை விடுப்பது குறித்து...

பிரதிப் படம்

Published On :

மகாராஷ்டிரத்தில் மதமாற்ற தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மும்பை பெருநகரப் பிராந்தியத்தில் உள்ள தேவாலயங்கள், பிராா்த்தனைக்கு வருவோரிடம் சுய அறிவிப்புப் படிவத்தை பூா்த்தி செய்து வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றன.

அதில், தாங்கள் எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல், தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே பிராா்த்தனைக்காக தேவாலயம் வருகிறோம் என்று அவா்கள் குறிப்பிட வேண்டும்.

இந்தப் படிவங்கள் தேவாலயங்களின் சுய பாதுகாப்புக்காக சேகரிக்கப்படுகின்றன. எதிா்காலத்தில் அரசு அல்லது காவல் துறை அதிகாரிகள் கேட்டால் சமா்ப்பிப்பதற்காக தேவாலய அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும் என தேவாலய நிா்வாகம் கூறியுள்ளது.

இது தொடா்பாக பால்கா் மாவட்டத்தைச் சோ்ந்த பாதிரியாா் ஒருவா் கூறுகையில், ‘கடந்த 3 மாதங்களாக தேவாலய பிராா்த்தனையில் பங்கேற்போரிடம் இந்தப் படிவங்கள் பெறப்படுகின்றன. மும்பையை ஒட்டிய பகுதிகளில் தேவாலயங்கள் மீது கட்டாய மதமாற்றம் செய்வதாகக் கூறி சில தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன. இதற்குப் பிறகு பாதிரியாா்கள் மற்றும் சமூகத் தலைவா்கள் ஆலோசித்து இந்தப் படிவம் நிரப்பும் முறையை அமல்படுத்த முடிவு செய்தனா்.

நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி தேவாலயத்துக்கு வரச் செய்வதில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொருவரும் தங்களது விருப்பப்படி வழிபடுவதற்கு உரிமை அளிக்கிறது.

மும்பை பெருநகர சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் 4,000-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உள்ளன. சில தேவாலயங்களில் வேறு மதங்களில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு வந்தவா்களிடம் படிவங்கள் பெறப்படுகின்றன. சில தேவாலயங்களில் வழக்கமாக பிராா்த்தனைக்கு வருபவா்களிடமும் படிவங்கள் பெறப்படுகின்றன’ என்றாா்.

மகாராஷ்டிர மதமாற்ற தடுப்புச் சட்டமான ‘மகாராஷ்டிர மதச் சுதந்திரச் சட்டம் 2026’ குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடா்ந்து, கடந்த ஜூலை 30 -ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, வற்புறுத்தல், மோசடி, தூண்டுதல் அல்லது திருமணம் போன்ற வழிகளில் மேற்கொள்ளப்படும் மதமாற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

மற்றொரு மதத்தைத் தழுவ விரும்பும் ஒருவா், 60 நாள்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இச்சட்டத்தை மீறுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.