தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

மனிதர்களுக்கு மட்டுமல்ல… குரங்குகளுக்கும் ஓணம் விருந்து! கேரளக் கோயிலின் தனித்துவம்!

கேரளக் கோயிலின் நெகிழ்ச்சியான மரபு பற்றி...

Onam feast for monkey

குரங்குகளுக்கு ஓணம் விருந்து - X

Published On :25 ஆகஸ்ட் 2026, 4:02 pm IST

கேரளத்தில் ஓணம் பண்டிகை மக்களுக்கான கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், அங்கு வசிக்கும் குரங்களுக்கும் விருந்தளிக்கப்படுகின்றது.

தென் கேரள மாவட்டமான கொல்லத்தில் உள்ள சாஸ்தம்கோட்டாவில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் வசிக்கும் குரங்குகளுக்காகவே பிரத்யேகமாக ஓணம் விருந்து தயாரிக்கப்படுகிறது.

பாரம்பரிய ஓணம் விருந்தின் முக்கிய உணவுகளான சாதம், பருப்பு, அப்பளம், பச்சடி, அவியல், ஊறுகாய், பழங்கள் ஆகிய உணவுகளும் குரங்களுக்குப் பரிமாறப்படுகின்றன. காண்பதற்கு இந்தக் காட்சி சற்று வித்தியாசமானதாக இருந்தாலும், அங்குள்ள பக்தர்களுக்கு இது மிகவும் பரிச்சயமான ஒன்றாகும்.

இதுதொடர்பாக கோயிலைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,

பண்டிகையின் முக்கிய நாள்களான உத்திராடம் மற்றும் திருவோணம் ஆகிய நாள்களில் குரங்களுக்கு இந்தச் சிறப்பு ஓணம் விருந்து அளிக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக இந்த ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் குரங்குகள் வாழ்ந்து வருவதாகவும், அவை கோயில் வளாகத்தின் ஒரு பகுதியாகத் திகழ்வதாகவும், இதுவே இந்த கோயிலுக்குரிய தனித்துவமான பாரம்பரிய சிறப்பாகும்.

கேரளத்தில் உள்ள ஐந்து பழமையான சாஸ்தா ஆலயங்களில் சாஸ்தம்கோட்டா ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலும் ஒன்றாகும். வானர சத்யா (குரங்குகளுக்கான விருந்து) எனப்படும் விருந்தை உண்பதற்காகக் குரங்குகள் மண்டபத்திற்கு வந்தன.

குரங்களுக்கு வழங்கப்படும் உணவு வாழை இலைகளில் பரிமாறப்பட்டது. முதலில் ஒரு குரங்கு கூட்டம் உணவை உண்டுவிட்டுச் சென்றது. சிறிது நேரத்திலேயே, மற்றொரு கூட்டம் அங்கு வந்தது.

ஒரு கூட்டம் நகர்ந்து செல்ல, அடுத்த கூட்டம் உள்ளே வர என, கோயில் வளாகமே குரங்குகள் உணவருந்தும் கூடமாக மாறியது. முதலில் விருந்து பரிமாறப்பட்டபோது சில குரங்குகள் தயக்கம் காட்டின. ஆனால் மெல்ல மெல்ல, அவை முன்வந்து உணவை உண்ணத் தொடங்கின. ஒன்றன்பின் ஒன்றாகக் குரங்கு கூட்டங்களின் வருகைத் தொடர்ந்தது. பல தசாப்தங்களாக இந்த ஆலயத்தில் இம்முறை தொடர்ந்து வருகின்றது.

நம்பிக்கை, பாரம்பரியம், பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய நீண்டகால நடைமுறையின் ஒரு பகுதியாகவே இந்த விருந்து அமைகிறது. கோயில் வளாகத்தைச் சுற்றி வசிக்கும் குரங்குகள் உள்ளூரில் 'அம்பலக்குரங்குகள்' (கோயில் குரங்குகள்) என்று அழைக்கப்படுகின்றன.

கோயில் வளாகத்திற்கு வெளியே வசிக்கும் குரங்குகள் கோயில் சூழலின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றன. அதே சமயம், வெளியிருந்து வரும் குரங்குகள் கோயில் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. 

குரங்குகளுக்கு விருந்து அளிக்கும் வழக்கம் ஓணம் பண்டிகையுடன் மட்டும் நின்றுவிடாமல் மற்ற நாள்களிலும் இது தொடர்கிறது. பக்தர்கள் பலரும் அவற்றுக்கு உணவை அளித்து வருகின்றனர். 

குரங்குகளுக்கு உணவளிப்பதற்காகவே கோயிலில் ஒரு பிரத்யேக அறை உள்ளது. அங்கு உணவு பரிமாறப்படும். தற்போது, ​​கோயிலை ஒட்டியுள்ள ஒரு சிறிய வனப்பகுதியில் சுமார் 40 குரங்குகள் வசித்து வருகின்றது.

இந்த மரபை கடைப்பிடிக்கும் மக்களைப் பொறுத்தவரை, இந்த விருந்து ஒரு எளிய செய்தியை உணர்த்துகிறது. ஓணம் பண்டிகையின் மகிழ்ச்சியானது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுடன் இணைந்து வாழும் விலங்குகளுக்கும் சென்றடைய வேண்டும் என்பதேயாகும். 

At a temple in Keralam, Onam is not only a celebration for people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.