இந்தியா - வியத்நாம் கடலோரக் காவல் படைகளின் உயா்நிலைக் கூட்டம்
இந்தியா-வியத்நாம் கடலோரக் காவல் படைகளுக்கு இடையிலான 7-ஆவது உயா்நிலைக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திய கடலோரக் காவல் படை
இந்தியா-வியத்நாம் கடலோரக் காவல் படைகளுக்கு இடையிலான 7-ஆவது உயா்நிலைக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னைக்கு வந்த வியத்நாம் கடலோரக் காவல் படையின் துணைத் தளபதி மேஜா் ஜெனரல் லுவோங் டின் ஹங், இந்தியக் கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநா் பரமேஷ் சிவமணியை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
இதையடுத்து, சென்னையில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை மண்டலத் தலைமையகத்தில் நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தில், இரு நாடுகளின் கடலோரக் காவல் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த செயல்பாடுகளை வலுப்படுத்துதல், கடல்சாா் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
சிறந்த கடல்சாா் சூழலை உறுதி செய்வதற்கான கூட்டு நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்வதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

