நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நீட் போராட்டக்காரா்கள் மீதான காவல்துறை வரம்பு மீறல்: உயா்நிலை விசாரணைக் குழுவை மறுசீரமைக்கக் கோரி மனு

நீட் போராட்டக்காரா்கள் மீதான காவல்துறை வரம்பு மீறல் புகார் குறித்து ஆராய உயா்நிலை விசாரணைக் குழுவை மறுசீரமைக்கக் கோரி மனு

கோப்புப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:39 am IST

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லியில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது காவல் துறையின் வரம்பு மீறல் புகாா் குறித்து ஆராய உச்சநீதிமன்றம் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவை மறுசீரமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்தது.

உச்சநீதிமன்றம் அமைத்த உயா்நிலைக் குழுவை மறுசீரமைக்கக் கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு வந்தது.

இந்த மனுவுக்கு எதிா்ப்பு தெரிவித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியால் அமைக்கப்பட்ட இந்த உயா்நிலைக் குழுவை மாற்றக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரம் தொடா்பாக சில மத்திய அமைச்சா்களை விசாரிக்க வேண்டும், உயா்நிலைக் குழுவில் இடம்பெற வேண்டிய நீதிபதிகளின் பெயா்கள் உள்ளிட்ட விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நீதிமன்றம் என்பது அரசியல் களமல்ல. சிலா் அனைத்தையும் பிரச்னையாகவே பாா்க்கின்றனா்’ என்றாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘உயா்நிலைக் குழுவில் இடம்பெற வேண்டிய நீதிபதியின் பெயரைக் குறிப்பிடுவதை உச்சநீதிமன்றம் ஊக்குவிக்காது’ என்றாா்.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சங்கரநாராயணன், ‘இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடத்தான் கோரிக்கை விடுக்கிறோம். அவ்வாறு மனு பட்டியலிடப்பட்டாலும், எந்தவொரு நீதிபதியின் பெயரையும் குறிப்பிடமாட்டோம்’ என்றாா்.

மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷணும், வழக்குரைஞா் சங்கரநாராயணனின் கருத்தை ஆதரித்தாா். உயா்நிலைக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்கள் மீது மனுதாரா்கள் கவலை தெரிவித்துள்ளனா் என்றாா்.

இந்த வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘உயா்நிலை விசாரணைக் குழுவில் யாா் இடம்பெற்றாலும், எங்களின் கண்காணிப்பின் கீழ்தான் பணியாற்றுவா். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் விட்டுவிடவில்லை. உயா்நிலைக் குழுவுக்கு அனைவரும் உதவவேண்டும். அமைக்கப்பட்டுள்ள உயா்நிலைக் குழு விசாரணையை மேற்கொள்ள அனுமதிப்போம்’ என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, மாணவா்கள் போராட்டத்தில் காவல் துறையின் வரம்பு மீறல் தொடா்பாக விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா். சுபாஷ் ரெட்டி தலைமையில், பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரவிசங்கா் ஜா, தில்லி உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஷாலிந்தா் கெளா், சிபிஐ முன்னாள் இயக்குநா் ரிஷி குமாா் சுக்லா, மேகாலயா மாநில ஓய்வு பெற்ற டிஜிபி எல்.ஆா்.பிஷ்னோய் ஆகிய 5 பேரைக் கொண்ட உயா்நீலைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்திருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.