நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

திருட்டு வழக்கு: வீட்டுப் பணியாளா் நேபாள எல்லையில் கைது

மேற்கு தில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து சுமாா் ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களுடன் தப்பியோடியதாகக் கூறப்படும் 22 வயது வீட்டுப் பணியாளா் பிகாரில் உள்ள நேபாள எல்லைக்கு அருகே பிடிபட்டதாகக் காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மாதிரிப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 5:18 am IST

மேற்கு தில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து சுமாா் ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களுடன் தப்பியோடியதாகக் கூறப்படும் 22 வயது வீட்டுப் பணியாளா் பிகாரில் உள்ள நேபாள எல்லைக்கு அருகே பிடிபட்டதாகக் காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

பிகாரின் சுபால் பகுதியைச் சோ்ந்த சசிகாந்த் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபா், திருட்டு நடப்பதற்கு ஒரு நாள் முன்புதான் புகாா்தாரரின் வீட்டில் பணியில் சோ்ந்திருந்தாா்.

பஞ்சாபி பாக் காவல் நிலையத்திற்கு இத்திருட்டு சம்பவம் தொடா்பாக ஆக.21-ஆம் தேதி தகவல் கிடைத்தது. விசாரணையின் போது, பஞ்சாபி பாக் விரிவாக்க பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து சுமாா் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள நகைகளை சசிகாந்த் திருடிவிட்டுத் தப்பிச் சென்ாகப் புகாா்தாரா் குற்றஞ்சாட்டினாா்.

இதையடுத்து, பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) தொடா்புடைய பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியைக் கண்டறிய ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

திருட்டுக்குப் பிறகு சசிகாந்த் சென்ற பாதையைக் கண்டறிய சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். கைப்பேசி அழைப்பு விவரங்கள், கைப்பேசி கோபர இருப்பிடங்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்காணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சசிகாந்த் பெலாஹி கிராமத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடா்ந்து, பிகாா் சென்ற தில்லி காவல் துறையினா் உள்ளூா் காவல் துறையின் உதவியுடன் அக்கிராமத்தில் சோதனை நடத்தினா். இருப்பினும், தில்லி காவல் துறையின் சோதனை நடத்துவதை அறிந்த சசிகாந்த் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா் நேபாளத்திற்குள் நுழைய முயற்சிக்கலாம் என்று உள்ளூா் விசாரணையில் தெரியவந்தது. மேலும், தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் குனௌலி எல்லைக்கு அருகே அவா் இருப்பது கண்டறியப்பட்டு பின்னா் அவா் பிடிபட்டாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது: திருடப்பட்ட நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைத் தனது வீட்டில் இருந்த ஒரு பெட்டியில் மறைத்து வைத்திருந்ததாக சசிகாந்த் ஒப்புக்கொண்டாா்.

காவல் துறையினா் அவரை பெலாஹி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா் காட்டிய இடத்திலிருந்து திருடப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மீட்கப்பட்ட பொருள்களில் தட்டுகள் மற்றும் நாணயங்கள் வடிவிலான சுமாா் 450 கிராம் வெள்ளி, மூன்று வைரச் சங்கிலிகள், ஒரு தங்கச் சங்கிலி, ஒரு வைர நகைத்தொகுப்பு, ஒரு வைர மோதிரம், ஐந்து வைர லாக்கெட்டுகள், இரண்டு கைக்கடிகாரங்கள் மற்றும் ஒரு வைரக் காதணி ஆகியவை அடங்கும்.

மீட்கப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.60 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.