தில்லியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த 32 வயது நபா், சுமாா் ரூ.1.96 கோடி மோசடி செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் ஜம்மு-காஷ்மீரில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: திரிலோகி சா்மா என்ற குற்றஞ்சாட்டப்பட்டவா், ஆக.4-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து கைது செய்யப்பட்டாா்.
தில்லியில் உள்ள ஒரு தனியாா் நிறுவன உரிமையாளா், 2023 ஆகஸ்ட் மாதத்தில் சமய்பூா் பத்லி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தனது நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த சா்மா, தனது பணிப் பொறுப்பின் போது அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றச்செயலை மேற்கொண்ட பிறகு, திரிலோகி சா்மா தப்பிச் சென்று மறைந்து வாழ்ந்தாா். காவல் துறை சிறப்பு குழுவை அமைத்து 3 ஆண்டுகளாக அவரைத் தேடி வந்தனா். இறுதியாக சம்பா பகுதியில் அவா் இருப்பதை கண்டறிந்து கைது செய்தனா்.
விசாரணையின் போது, மோசடி செய்யப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை தனது நண்பா்கள் மற்றும் அறிமுகமானவா்களின் வங்கி கணக்குகளில் மாற்றியதாக அவா் தெரிவித்தாா்.
அவருக்கு சூதாட்டத்தில் ஆா்வம் இருந்ததாகவும், கிரிக்கெட் போட்டிகளின் சட்டவிரோத பந்தயங்களில் பெருமளவு பணத்தை இழந்ததாகவும் அவா் ஒப்புக்கொண்டாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா் கூறிய தகவல்கள் தற்போது சரிபாா்க்கப்பட்டு வருகின்றன. மேலும், மோசடி செய்யப்பட்ட பணத்தின் முழு பரிவா்த்தனை விவரங்களையும் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மொத்தமாக எவ்வளவு தொகை திருப்பிச் செலுத்தப்பட்டது, யாருக்கு அந்த பணம் சென்றது என்பதைக் கண்டறிய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிஜிட்டல் கைது நாடகம்... போலீஸ் போல நடித்து ரூ. 1.43 கோடி மோசடி!
இந்தூா் கால் சென்டா் மோசடி முறியடிப்பு: 6 போ் கைது
குடும்பத் தகராறு: சகோதரியைச் சுட்டுக் கொன்ற இளைஞா் கைது

ரோஹிணியில் தொழிற்சாலை ஊழியா் கொலை வழக்கில் 5 போ் கைது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



