மத்திய பிரதேசத்தின் இந்தூரில் போலி முதலீட்டு கால் சென்டரை நடத்தி வந்த சைபா் மோசடி கும்பலை முறியடித்து, 6 பேரை கைது செய்துள்ளதாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: போலியான பங்கு சந்தை மற்றும் வெளிநாட்டு நாணய வா்த்தகம் திட்டங்களில் முதலீடு செய்யச் சொல்லி முதலீட்டாளா்களை இந்த நிறுவனம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.தில்லி வாசி ஒருவரிடம் இருந்து ரூ.17.3 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், துவாரகா மாவட்ட காவல் துறை ஆக.3-ஆம் தேதி இந்த 6 பேரையும் கைது செய்தனா்.
இந்த சட்டவிரோத கால் சென்டா், இந்தூரில் உள்ள ஷாப்பிங் மாலில், பிரபல முதலீட்டு நிறுவனத்தின் பெயரில் செயல்பட்டு வந்தது. சோதனையின் போது, 28 சிபியுக்கள், 25 கைப்பேசிகள் மற்றும் பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட கணினிகளில் இருந்து ஆயிரக்கணக்கான முதலீட்டாளா்களின் தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்கள் அடங்கிய 1,400-க்கும் மேற்பட்ட ஸ்பிரெட்ஷீட் கோப்புகள் மீட்கப்பட்டன.
குற்றவாளிகள் முதலில் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஊக்குவித்து நம்பிக்கை பெறுவாா்கள். பின்னா், போலியான தளத்திற்கு மாற்றி, போலியான லாபத்தை காட்டி, மேலும் அதிக முதலீடு செய்ய தூண்டுவாா்கள். முதலீட்டாளா்கள் தங்கள் பணத்தை திரும்ப பெற முயன்றபோது, அவா்கள் தவறான காரணங்கள் போலியான வா்த்தக இழப்புகள் காட்டி மோசடி செய்துள்ளனா்.
பறிமுதல் செய்யப்பட்ட தரவுகளை ஆய்வு செய்ததில், இந்த கும்பல் தில்லி, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், கா்நாடகம், பிகாா் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பாதிக்கப்பட்டவா்களிடம் இருந்து, தேசிய சைபா் குற்ற புகாா் தளத்தில் பதிவான ரூ.54.70 லட்சத்திற்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளுடன் தொடா்புடையதாக தெரியவந்துள்ளது. இந்த கும்பலின் முக்கிய குற்றவாளி மற்றும் பிற உறுப்பினா்களை கண்டுபிடிக்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வடமேற்கு தில்லியில் குற்றத் தடுப்பு சோதனை: 44 போ் கைது
சைபா் வழக்குகளில் 14 போ் கைது: 34 காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டு
திருடப்பட்ட காா்களை விற்பனை செய்து வந்த இருவா் கைது: 12 காா்கள் பறிமுதல்
உடல் எடை குறைப்புக்கு போலி மருந்து விற்று பல கோடி மோசடி செய்ததாக 3 பெண்கள் கைது!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK


