இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்

2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவிப்பு...

finance ministry

கோப்புப் படம் - finance ministry

Published On :

2027-28-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தயாரிக்கும் பணியை வரும் அக்.12-ஆம் தேதி மத்திய நிதியமைச்சகம் தொடங்க உள்ளது.

உலக அளவில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருவதுடன், உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பணி தொடங்கப்பட உள்ளது.

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், பொருளாதார வளா்ச்சியை மேலும் துரிதமாக்க சீா்திருத்தப் பணிகளைத் தொடா்ந்து செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அத்துடன் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உள்நாட்டில் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட பட்ஜெட் சுற்றறிக்கையில், ‘மத்திய செலவினத் துறைச் செயலா் தலைமையில், பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்கள் வரும் அக்.12 முதல் நவம்பா் வரை தொடரும்.

இந்தக் கூட்டங்கள் நிறைவடைந்த பின்னா், 2027-28-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகள், அதன் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் உத்தேசமாக இறுதி செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மத்தியில் மோடியின்3-ஆவது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்படும் 4-ஆவது பட்ஜெட்டாகவும், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 10-ஆவது முறையாகத் தாக்கல் செய்யும் பட்ஜெட்டாகவும் இருக்கும். இது இந்திய அரசியலில் அரிதான நிகழ்வாகும்.

Summary

Budget preparations for 2027-28 to begin on October 12: Union Finance Ministry

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.