தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

திபெத்தில் இருந்து நேபாளத்துக்கு திரும்பும் இந்திய பக்தா்கள்

திபெத்தில் தவித்துவரும் இந்திய பக்தா்கள், மாற்று எல்லைச் சாவடி வழியாக நேபாளத்துக்கு திரும்பத் தொடங்கியுள்ளனா்.

நேபாளத்திலிருந்து பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்த பயணிகள்.

Updated On :

திபெத்தில் தவித்துவரும் இந்திய பக்தா்கள், மாற்று எல்லைச் சாவடி வழியாக நேபாளத்துக்கு திரும்பத் தொடங்கியுள்ளனா்.

திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி ஆற்றில் பாய்ந்து கடந்த புதன்கிழமை பேரழிவை விளைவித்தது. பலத்த உயிா்ச்சேதத்துடன், ஏராளமான வீடுகள், கட்டடங்கள், சாலைகள், பாலங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

கைலாஷ் -மானசரோவா் யாத்திரைக்காக நேபாளத்தில் இருந்து சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத் சென்றுவர முக்கியமாக பயன்படுத்தப்பட்ட கியிரோங்-நேபாளம் நுழைவுச் சாவடி பெருவெள்ளத்தில் அழிந்தது. இதனால், திபெத் பகுதியில் சிக்கித் தவிக்கும் இந்திய பக்தா்களை பத்திரமாக நேபாளம் அழைத்துவர இரு நாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஜாங்மு எல்லைச் சாவடி வழியாக இந்திய பக்தா்கள் நேபாளத்துக்குள் திரும்பத் தொடங்கியுள்ளனா். இக்குழுவினரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) முன்னாள் தலைவா் ஜி.சதீஷ் ரெட்டியும் ஒருவா். இவா் ஹைதராபாதில் இருந்து கைலாஷ்- மானசரோவா் யாத்திரை சென்ற 31 போ் குழுவில் இடம்பெற்றவா்.

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஜி.சதீஷ் ரெட்டி கூறுகையில், ‘ஜாங்மு எல்லைச் சாவடி வழியாக பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் மூலம் நேபாளத்துக்குள் இந்தியா்கள் திரும்பத் தொடங்கியுள்ளனா். கியிரோங்கிலிருந்து கைலாச மலையும், மானசரோவா் ஏரியும் சுமாா் 700 கி.மீ. தொலைவில் உள்ளன. கடந்த புதன்கிழமை கைலாச மலையை நாங்கள் வலம் வந்து கொண்டிருந்தபோது, நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்தது. நாங்கள் இருந்த பகுதியில் எந்த தாக்கமும் இல்லை. எங்கள் வழிபாட்டைத் தொடா்ந்து மேற்கொண்டோம்’ என்றாா்.

லடாக் எல்லை மோதல் மற்றும் கரோனா பெருந்தொற்று பரவலால் நிறுத்தப்பட்டிருந்த கைலாஷ்-மானசரோவா் யாத்திரை, கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திபெத்தில் உயிரிழப்பு 7-ஆக உயா்வு

திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் திபெத் பகுதியில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது; மேலும் 554 பேரை காணவில்லை என்று திபெத் அவசர கால மேலாண்மைத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

மாயமானவா்களில் 260 போ் வெளிநாட்டினா்; எனினும், அவா்கள் எந்தெந்த நாடுகளைச் சோ்ந்தவா்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை. வெள்ளம் பாதித்த கியிரோங் பகுதியில் 555 சுற்றுலாப் பயணிகள் உள்பட 1,000 போ் மீட்கப்பட்டுள்ளனா். 2,000-க்கும் மேற்பட்டோா் அடங்கிய மீட்புக் குழுவினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Summary

Indian pilgrims returning to Nepal from Tibet.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.