தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

நேபாள பெரு வெள்ளம்! திபெத்தில் 39 தமிழர்கள் பற்றிய தகவல் கிடைத்தது!

நேபாள பெரு வெள்ளத்தின்போது, திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

nepal flood

நேபாள வெள்ளம் - ANI

Updated On :

தமிழகத்திலிருந்து நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் சென்று திபெத்தில் சிக்கியிருந்த 39 தமிழர்கள் பற்றிய தகவல் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்று, பெரு வெள்ளம் நேரிட்டபோது திபெத்தில் இருந்த 39 தமிழகர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் ஆக. 31ஆம் தேதி காத்மாண்டுவில் இருந்து புது தில்லிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றும், அவர்களில் 33 பேர் புது தில்லியில் இருந்து கோவைக்கும், 6 பேர் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கும் பணியும் நடைபெறவிருக்கிறது.

புது தில்லியிலிருந்து 33 பேர் பயணிக்கும் விமானம் கோவை விமானம் 31ஆம் தேதி மாலை புறப்பட்டு, இரவு சென்றடையும். 6 பேர் பயணிக்கும் தில்லி - சென்னை விமானம் 31ஆம் தேதி மாலை புறப்பட்டு இரவு சென்னையை சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து நேபாளம் சென்ற 103 பேரில் 21 பேர் பத்திரமாக நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினர்.

இந்தக் குழுவினர் தவிர்த்து தற்போது புதிதாக கோவை மற்றும் சென்னையிலிருந்து நோபளம் சென்ற மேலும் 39 தமிழர்கள் திபெத்தில் பாதுகாப்பாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், கும்பகோணம் மற்றும் சென்னையிலிருந்து ஏஜென்ஸி மூலம் நேபாளம் சென்றவர்களில் சென்னை மீண்ட 21 பேர் தவிர காணாமல் போனவர்களின் தகவல் இதுவரை தெரியவரவில்லை.

அதேவேளையில், சாஹா எனும் பகுதியில் 148 இந்தியர்கள், 2 வெளிநாட்டவர் என 150 பேர் கொண்ட குழு சிக்கியதாகவும் தங்களை சீன ராணுவம் மீட்டதாக தேச மங்கையர்கரசி விடியோ வெளியிட்டிருந்தார். இவர்கள் தற்போது காத்மாண்டுவில் இருப்பதாகவும் தமிழக அமைச்சர்கள் குழு, வெளியுறவுத் துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.