இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

நேபாளத்துக்கு இந்தியா உதவிக்கரம்: 10 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறித்து...

10 tonnes of relief materials sent from India to Nepal.

இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு. - படம் - எக்ஸ்

Published On :26 ஆகஸ்ட் 2026, 9:47 pm IST

இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (ஆக. 26) தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் இன்று (ஆக. 26) காலை கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 400க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 95 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெவித்துள்ளது.

இந்தப் பெருவெள்ளத்தில் 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அதில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களும் அடங்குவர். மேலும், நேபாளத்துக்குச் சென்ற தமிழர்கள் 57 பேரும் அந்தப் பகுதியில் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள்.

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள். - படம் - எக்ஸ்

இந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடருக்கு ஆதரவு தரும் வகையில், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட 10 டன் பொருள்கள் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இக்கட்டான சூழலில் நேபாளத்துடன் பாதிக்கப்பட்ட அனைவருடனும் இந்தியா துணை நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள்.

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள். - படம் - எக்ஸ்

Summary

Union External Affairs Minister Jaishankar has stated that 10 tonnes of relief materials have been sent from India to Nepal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.