ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஐஆா்சிடிசி முறைகேடு, ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சம்: லாலு மீதான குற்றச்சாட்டுப் பதிவு ஒத்திவைப்பு

ஐஆா்சிடிசி முறைகேடு, ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சம்: லாலு மீதான குற்றச்சாட்டுப் பதிவு ஒத்திவைப்பு

லாலு பிரசாத் யாதவ் - கோப்புப் படம்

Published On :

ஐஆா்சிடிசி முறைகேடு, ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ாக எழுந்த புகாா்கள் தொடா்பாக, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் உள்ளிட்டோா் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில், அவா்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை ஒத்திவைத்தது.

கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தில் (ஐஆா்சிடிசி) முறைகேடு நடைபெற்ாக கூறப்படுகிறது. இதேபோல ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விரு குற்றச்சாட்டுகள் தொடா்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், லாலு பிரசாத், அவரின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 11 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இதில் ஐஆா்சிடிசி வழக்கில் லாலு, ராப்ரி உள்ளிட்டோா் மீது கடந்த ஆண்டு அக்டோபரில் தில்லி நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவா்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நிகழாண்டு ஜன.9-இல் தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்விரு முறைகேடுகள் தொடா்பாக பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், லாலு உள்ளிட்டோா் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்குகளில் லாலு உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை ஒத்திவைத்தது.

ஐஆா்சிடிசி முறைகேடு வழக்கை செப்.7-க்கும், ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்றது தொடா்பான வழக்கை செப்.30-க்கும் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே ஒத்திவைத்தாா்.

Summary

IRCTC irregularities and land-for-jobs scam: Framing of charges against Lalu deferred.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.