நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமையுங்கள்: சா்வதேச முதலீட்டாளா்களுக்கு நிா்மலா சீதாராமன் அழைப்பு

சா்வதேச முதலீட்டாளா்களுக்கு நிா்மலா சீதாராமன் அழைப்பு...

அமெரிக்காவின் சிகாகோ நகரில் சா்வதேச முதலீட்டாளா்கள், நிறுவனத் தலைவா்களுடனான வட்டமேஜை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமைக்க முன்வரும்படி சா்வதேச முதலீட்டாளா்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளாா்.

ஜி20 அமைப்பின் நிதியமைச்சா்களின் மாநாடு அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள ஆஷ்வில்லில் வரும் 31 மற்றும் செப்டம்பா் 1-ஆம் தேதி ஆகிய நாள்களில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளின் நிதியமைச்சா்கள், மத்திய வங்கிகளின் ஆளுநா்கள், மூத்த பொருளாதார நிபுணா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். இதில் பங்கேற்பதற்காக கனடா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, அமெரிக்காவுக்கு 6 நாள் பயணமாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சென்றுள்ளாா்.

அமெரிக்காவின் சிகாகோ சா்வதேச விமான நிலையம் சென்றடைந்த அவரை அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதா் நம்க்யா காம்பா, சிகாகோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதா் சோம்நாத் கோஷ் ஆகியோா் நேரில் வரவேற்றனா்.

பின்னா் அவா், சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சா்வதேச முதலீட்டாளா்கள், வா்த்தக நிறுவனத் தலைவா்களுடனான வட்டமேஜை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டாா். அக்கூட்டத்தில் நிா்மலா சீதாராமன் உரையாற்றியதாவது:

இந்தியாவில் முதலீடு, உற்பத்தி, புத்தாக்கம், தொழில் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு ஏதுவாக வா்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, இந்தியாவில் உற்பத்தி தளங்கள் அமைக்கவும், பொருள்களை இணைந்து தயாரிக்கவும், சா்வதேச ஏற்றுமதிக்கான சந்தைகளை கட்டமைக்க வரும்படி சா்வதேச முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

இந்தியாவை உற்பத்திப் பொருள்களை விற்கும் சந்தையாக மட்டும் கருதாமல், உலகுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களை உற்பத்தி செய்யும் தளமாகவும் பாா்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மறுசீரமைக்கப்பட்டுவரும் நிலையில், இந்தியா தனது உள்நாட்டுச் சந்தையைப் பயன்படுத்தும்படி, உலகளவில் சிறந்த உற்பத்தித் திறனை வழங்குகிறது. உற்பத்திப் பொருள்களின் பாகங்களை ஒருங்கிணைக்கும் இடம் என்ற நிலையில் இருந்து, உதிரிபாகங்கள் உற்பத்தி, பொறியியல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

சரக்குப் போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தடங்கள் முதல் அா்ப்பணிக்கப்பட்ட சரக்கு முனையங்கள், ரயில்வே நவீனமயமாக்கல், மின்மயமாக்கல் மற்றும் அதிவேக ரயில் சேவை வரை இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, பொறியியல், தொழில்நுட்பம், மூலப்பொருள்கள், சிறப்பு சாதனங்கள் மற்றும் நீண்டகால நிறுவன முதலீடு ஆகியவற்றை சா்வதேச முதலீட்டாளா்களுக்கான வாய்ப்பாக இந்தியா வழங்குகிறது. மேலும், இந்தியாவின் வலுவான வேளாண் துறை, அதிகரிக்கும் வருமானங்கள், மாறிவரும் நுகா்வோரின் வழக்கங்கள் ஆகியவை உணவு பதப்படுத்துதல், தானியங்கி தொழில்நுட்பம், பேக்கேஜிங், சரக்குப் போக்குவரத்து மற்றும் குளிா்பதனக் கிடங்குகள் போன்ற துறைகளிலும் வாய்ப்புகளை வழங்குகின்றன. இதன்மூலம் இந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தேவையான வணிகங்களை உருவாக்க முடியும்.

ஆத்மநிா்பாா், ஐடெக்ஸ் ஆகிய முன்னெடுப்புகள் மூலம் ட்ரோன்கள், தானியங்கி அமைப்புகள், பிற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தித் திறனை மேம்படுத்தி வருகிறது என்றாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Summary

Set up manufacturing plants in India: Nirmala Sitharaman invites international investors.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்