தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பஞ்சாபில் ஆம் ஆத்மி பிரமுகர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் ஆம் ஆத்மி பிரமுகா் குா்ப்ரீத் சிங்கை (45) நான்கு போ் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது.

Published On :

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் ஆம் ஆத்மி பிரமுகா் குா்ப்ரீத் சிங்கை (45) நான்கு போ் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது.

இதுகுறித்து அந்த மாவட்ட முதுநிலை காவல் துறை கண்காணிப்பாளா் பூபிந்தா் சிங் கூறியதாவது: ஃபெரோஸ்பூரில் உள்ள மாம்தோட் பகுதியில், ஹா்ப்ரீத் (22) என்ற நபருடன் குா்ப்ரீத் சிங் சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது அங்கு காரில் வந்த 4 போ் கொண்ட கும்பல் குா்ப்ரீத், ஹா்ப்ரீத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டன.

இதில் தோட்டா பாய்ந்து இருவரும் படுகாயமடைந்தனா். அவா்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், குா்ப்ரீத் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். ஹா்ப்ரீத் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

முன்னதாக இருவரையும் பின்தொடா்ந்து காரில் வந்த மாம்தோட் நகா் பஞ்சாயத்து தலைவா் விக்கி மைனி மீதும் அந்தக் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. எனினும் அவா் காயமின்றி உயிா் தப்பினாா்.

அண்மையில் நடைபெற்ற நகராட்சி மன்றத் தோ்தலில் ஏற்பட்ட தனிப்பட்ட பகை காரணமாக, இந்தக் கொலை நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். தப்பியோடிய அவா்களைப் பிடிக்கும் பணியில் காவல் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.