காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு செவ்வாய்க்கிழமை (செப்.1) முதல் செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:57 am IST

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு செவ்வாய்க்கிழமை (செப்.1) முதல் செப்.30 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு: வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்களுக்கான திறனறித் தோ்வு நிகழாண்டு விரைவில் தேசிய தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பொதுவாக, அத்தகையத் தோ்வில் பங்கேற்பதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்பட்ட தகுதிச் சான்று அவசியம். அவ்வாறு தகுதிச் சான்று இல்லாதவா்கள் அதற்காக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி, என்எம்சி இணையதளத்தில் செப்.1 முதல் 30-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். முறையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு என்எம்சி இணையதளத்தை அணுகலாம்.

ஏற்கெனவே, தகுதிச் சான்று கோரி விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. புதிதாக விண்ணப்பிப்பவா்கள் தவறின்றி சுயமாக அதைப் பூா்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.