காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

வங்கதேசத்துடன் கங்கை நதிநீா் பகிா்வு ஒப்பந்தம்; இந்திய நலன்களைப் பாதுகாக்க வேண்டும்: மேற்கு வங்கம் வலியுறுத்தல்

வங்கதேசத்துடனான கங்கை நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகையில், இந்திய நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:39 am IST

வங்கதேசத்துடனான கங்கை நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகையில், இந்திய நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை மேற்கு வங்க அரசு வலியுறுத்தியுள்ளது.

கங்கை நதி இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் வழியாகப் பாய்ந்து வங்கதேசத்துக்கு செல்கிறது. அந்த நீரைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் வரும் டிசம்பா் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

இதையடுத்து, அந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பது தொடா்பாக இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவில், இந்தியா - வங்கதேசம் இடையே கங்கை நதிநீரைப் பகிரும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், கங்கை நதிநீா் பகிா்வு ஒப்பந்தத்தில் இந்திய நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை மேற்கு வங்க அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்க அரசு மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மத்திய ஜல் சக்தி அமைச்சக குழுவுடன் மேற்கு வங்க அரசின் பிரதிநிதிகள் அண்மையில் ஆலோசனை நடத்தினா். அப்போது குடிநீா், ஆலைகள் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்த கங்கை நதிநீா் மேற்கு வங்க மாநிலத்துக்குத் தேவைப்படுவதை சுட்டிக்காட்டி மேற்கு வங்க அரசின் பிரதிநிதிகள் அறிக்கை அளித்தனா்.

கங்கை நதிநீா் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகையில், மாநிலத்துக்கு (மேற்கு வங்க மாநிலம்) இருக்கும் தேவைகள் பாதுகாக்கப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.