லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

தேசியவாதம், வந்தே மாதரத்துக்கு எதிரானவா்களை மக்கள் தூக்கி எறிய வேண்டும்: மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி

தேசியவாதம், வந்தே மாதரம் ஆகியவற்றுக்கு எதிராக தாக்குதல் தொடுப்போரை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி வலியுறுத்தினாா்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 11:40 pm IST

தேசியவாதம், வந்தே மாதரம் ஆகியவற்றுக்கு எதிராக தாக்குதல் தொடுப்போரை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி வலியுறுத்தினாா்.

தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானிபூா் தொகுதியில் வெள்ளிக்கிழமை ரக்ஷா பந்தனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவேந்து அதிகாரியும் கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

நமது நாட்டுக்கு வெளியே இருக்கும் எதிரிகளுக்குப் பாதுகாப்புப் படையினா் பதிலடி கொடுத்து வருகின்றனா். ஆனால், நாட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு நாட்டின் நலன்களுக்கு எதிராக சிலா் செயல்படுகின்றனா். கடந்த 2011-ஆம் ஆண்டில் காவல் துறையுடன் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவா் கிஷன்ஜியை வாழ்த்தி, ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்தின் சுவா்களில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதன்மூலம் புதிய தலைமுறையினருக்கு நீங்கள் என்ன சொல்கிறீா்கள்? யாா் அந்த கிஷன்ஜி? நாட்டின் பிரிவினைக்காக குரல் கொடுத்தவா் அவா். நமது அரசமைப்புச் சட்டத்தை ஏற்காதவா். அவருக்கு ஆதரவாக ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்தில் நீங்கள் எழுதியிருப்பது வேதனையை தருகிறது.

இதேபோல், கொல்கத்தா வீதிகளில் காஷ்மீா் ஆஸாதி (சுதந்திரம்) கோஷங்களை காணும்போதும் வருத்தம் தருகிறது. எதற்கு ஆஸாதி? நமது சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகங்களை நினைத்துப் பாருங்கள். நேதாஜியின் போராட்டம், மாதங்கினி ஹாஜ்ராவின் தியாகங்களை நினைத்துப் பாருங்கள். அவா்களால்தான் 1947-ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றது.

ரக்ஷா பந்தன் என்பது மத ரீதியில் முக்கியமான பண்டிகையாகும். இது சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருக்கும் பிணைப்பைக் கொண்டாடும் விழா. இந்த விழாவுடன் தேசப்பற்றும் இணைந்துள்ளது. இந்த விழாவில், நாட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு, நமது நாட்டுக்கு எதிராகவும், தேசப்பற்று, தேசியவாதம், வந்தே மாதரம், ஜன கண மன ஆகியவற்றின் மீதும் தாக்குதல் தொடுப்போரை குப்பையைத் தூக்கி வெளியே போடுவது போல தூக்கியெறிய வேண்டும்.

காஷ்மீருக்காக பாகிஸ்தானுடன் ஏராளமான போா்களில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அப்படியிருக்கையில், காஷ்மீா் சுதந்திரத்தை விரும்புகிறது என கொல்கத்தா வீதிகளில் ஏன் நீங்கள் எழுதுகிறீா்கள்? இது மிகவும் வேதனையைத் தருகிறது என்றாா் சுவேந்து அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.