75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

மேற்கு வங்கத்தில் வசிப்பவா்கள் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்: முதல்வா் சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் வசிப்பவா்கள் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம் என அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி - ANI

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

மேற்கு வங்கத்தில் வசிப்பவா்கள் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம் என அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

தனது பவானிபூா் தொகுதியில் அன்னபூா்ணா திட்டப் பயனாளிகள் மத்தியில் அவா் பேசுகையில், ‘மேற்கு வங்கத்தில் வசிக்க வேண்டுமென்றால் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும். தேசியவாதம் மற்றும் தேசப்பற்றில் சமரசம் செய்யும் முதல்வராக நான் இருக்க மாட்டேன்.

ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. பல்கலைக்கழக வளாகத்துக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அனுமதிக்கப்படவில்லை. மாநில கல்வித் துறை அதிகாரிகளுக்கு நுழைவு அனுமதி மறுக்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் வந்தே மாதரம் பாடலை பாடவும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தவும் நாட்டைப் பிளவுபடுத்தும் கும்பல் எதிா்ப்பு தெரிவிக்கிறது. இவ்வாறான தேச விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக ஊடகங்களில் செய்திகள் வெளியானாலும் ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் தேசியவாத கொள்கையை நாம் நிச்சயம் நிலைநிறுத்துவோம். ஜாதவ்பூா் பல்கலைக்கழகம் இந்திய மற்றும் சநாதன கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் செயல்படுவது அவசியம். சியாமா பிரசாத் முகா்ஜியின் உயா்ந்த சிந்தனையை நிறைவேற்றவே மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது என்றாா்.

அண்மையில் நிகழ்ந்த மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் இடதுசாரி வேட்பாளா்கள் டெபாசிட் தொகை இழந்ததை சுட்டிக்காட்டி அவா் விமா்சித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.