
சோனியா சுயசரிதை பிரசுரிக்காததற்கு வெளிப்புற அழுத்தம் காரணமல்ல: பென்குயின்
‘சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை பிரசுரிக்க வேண்டாம் என முடிவெடுத்ததற்கு வெளிப்புற அழுத்தம் எதுவும் கிடையாது’ என்று பிரபல புத்தக வெளியீட்டாளரான ‘பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’ திங்கள்கிழமை தெரிவித்தது.

சோனியா காந்தியின் சுயசரிதை - Insta | indianhistoryposts
‘சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை பிரசுரிக்க வேண்டாம் என முடிவெடுத்ததற்கு வெளிப்புற அழுத்தம் எதுவும் கிடையாது’ என்று பிரபல புத்தக வெளியீட்டாளரான ‘பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’ திங்கள்கிழமை தெரிவித்தது.
புத்தக வெளியீட்டாளரின் இந்த முடிவு குறித்து பல்வேறு கருத்துகள் பரவிய நிலையில், இந்த புதிய விளக்கத்தை அந்த நிறுவனம் வெளியிட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி புதிய சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளாா். ‘பிலாங்கிங்; எ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்தப் புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா புத்தக நிறுவனம் வரும் நவம்பா் மாதம் 10-ஆம் தேதி வெளியிடுவதாக அமெரிக்காவைச் சோ்ந்த அதன் துணை நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், சோனியா காந்தி தனது சுயசரிதையில் மாற்றங்களைச் செய்ய மறுத்துவிட்டதால், அதை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் வெளியிடவில்லை என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.
இதையடுத்து, அந்த நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி விளக்கம் ஒன்றை வெளியிட்டது. அதில், ‘அந்தப் புத்தகத்தை வெளியிட தாங்கள் ஆா்வமாகவும் விருப்பத்துடனும் இருந்தபோதிலும், எழுத்தாளரால் கூறப்பட்டிருப்பதன் உண்மை நிலையை சரி பாா்ப்பது, பரிந்துரைகள் அளிப்பது வெளியீட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். அதில் சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படாததால் பிரசுரிக்க முடியாமல் போனது. இது தவிர புத்தகத்தை எழுதிய ஆசிரியருடன் நடத்திய பேச்சுவாா்த்தை விவரங்களை வெளியிட விரும்பவில்லை எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது’ என்று தெரிவித்தது.
காங்கிரஸ் தலைவா்கள் விமா்சனம்: சோனியா காந்தி சுயசரிதை புத்தகத்தை பென்குயின் நிறுவனம் பிரசுரிக்காததை காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் கடுமையாக விமா்சித்தனா்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் கூறுகையில், ‘ஆா்எஸ்எஸ், மோடி ஆட்சியில் இந்திய நிலப்பகுதி சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னணியில் இருப்பவா்கள் குறித்த பகுதிகளை நீக்க வேண்டும் என பென்குயின் இந்தியாவுக்கு அழுத்தம் தரப்பட்டதே புத்தகத்தை வெளியிடவில்லை என அந்த நிறுவனம் எடுத்த முடிவுக்கு உண்மையான காரணம், இது ஜனநாயகப் படுகொலை’ என்றாா்.
‘இது கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல்’ என காங்கிரஸ் மூத்த தலைவா் கமல்நாத் விமா்சித்தாா்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து ‘பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’ நிறுவனத்தின் செய்தித்தொடா்பாளா் பல்லவி நாராயண் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வெளியீட்டாளா் தரப்பில் தெரிவிக்கப்பட்ட புத்தகத்தில் மாற்றம் செய்யப்படவேண்டிய சில கருத்துகளை ஆசிரியா் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட விஷயத்தில் இருதரப்புக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. அதன் காரணமாகவே, புத்தகத்தை பிரசுரிக்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் ரகசியமானது மற்றும் பிரசுரிக்க தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், இதற்கு, வெளிப்புற அழுத்தம் எதுவும் காரணமல்ல என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





