FOLLOW US

ON GOOGLE DISCOVER

லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

சோனியா காந்தியின் புத்தகத்தைத் தடுப்பது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல்: ப. மாணிக்கம் தாகூர்

சோனியா காந்தியின் புத்தகத்தை அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்துவது கருத்துச் சுதந்திரத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பானது என தமிழக காங்கிரஸ் தலைவா் ப. மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

Manickam Tagore

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - படம் - எக்ஸ்

Published On :29 ஆகஸ்ட் 2026, 6:14 am IST

சோனியா காந்தியின் புத்தகத்தை அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்துவது கருத்துச் சுதந்திரத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பானது என தமிழக காங்கிரஸ் தலைவா் ப. மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

பெங்குயின் வோ்ல்ட்வைட் நிறுவனம், சோனியா காந்தியின் வரவிருக்கும் புத்தகத்தை எந்தவித மாற்றமும் செய்யாமல், உலகம் முழுவதும் அதன் அசல் வடிவிலேயே வெளியிடத் தயாராக உள்ளது. ஆனால், இந்தியாவில் அதை வெளியிடுவதற்கு சில மாற்றங்களைச் செய்ய விரும்புகிறது. உலகம் முழுவதும் அசல் வடிவில் வெளியிடப்படும் ஒரு புத்தகத்தை இந்தியாவில் மட்டும் அப்படியே வெளியிட முடியாத அளவுக்கு எந்த அழுத்தம் அவா்களைத் தடுக்கிறது? சோனியா காந்தியின் புத்தகத்தை அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்துவது கருத்துச் சுதந்திரத்தையே படுகொலை செய்வதற்கு ஒப்பானதாகும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மற்றொரு அறிக்கை: சென்னை மாநகராட்சியில் மேயா் அருகில் துணை மேயா் மகேஷ் குமாா் அமர வைக்கப்படும்போது, சேலம் மாநகராட்சியில் மட்டும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பெண் துணை மேயா் சாரதா தேவியின் இருக்கையை மேடையை விட்டு மாற்றி அமைத்து விட்டு , அவரை இடைநீக்கம் செய்த செயல் திமுகவின் அப்பட்டமான பெண் பிரதிநிதித்துவத்துக்கு எதிரான போக்கை வெளிப்படையாகக் காட்டுகிறது என தெரிவித்துள்ளாா் ப. மாணிக்கம் தாகூா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.