மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பங்குச் சந்தைகள் இன்று(பிப். 1) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,947.31 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலையில் 500 புள்ளிகள் வரை குறைந்தது.
தொடர்ந்து பிற்பகல் 12.20 மணியளவில் சென்செக்ஸ் 1,113.48 புள்ளிகள் குறைந்து 81,453.17 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 389.20 புள்ளிகள் குறைந்து 25,029.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 - 27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று(பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பட்ஜெட் உரையில் அமைச்சர் பேசும்போது, நிதி சார்ந்த எதிர்காலங்கள் மற்றும் விருப்பங்கள் (Futures and options) வர்த்தகத்திற்கான பத்திரங்கள் பரிவர்த்தனை வரி 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் சீதாராமன் கூறினார்.
இதையடுத்து பங்குச்சந்தைகள் கடுமையாக சரிவைச் சந்தித்து வருகின்றன. பெரும்பாலாக அனைத்து துறைகளும் கடும் சரிவில் வணிகமாகி வருகின்றன.
பட்ஜெட் தாக்கலையொட்டி இன்று பங்குச்சந்தைகள் செயல்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
Summary
Markets in deep red on Budget day: Sensex falls 1,000 pts from day’s high, Nifty below 25,050
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சரிந்து மீளும் பங்குச்சந்தை! ரியல் எஸ்டேட், வங்கிப் பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு! ஏன்?

எம்எஸ்சிஐ மறுசீரமைப்பு, பருவமழை அச்சம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஆட்டோ, வங்கிப் பங்குகள் லாபம்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK




