மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மத்திய பட்ஜெட்! உயிரி மருத்துவத் துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் உயிரி மருத்துவத் துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

News image
budget- ANI
Updated On :1 பிப்ரவரி 2026, 5:55 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய பட்ஜெட்டில் உயிரி மருத்துவத் (பயோ-ஃபார்மா) துறைக்கான ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

பயோஃபார்மா துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்க மத்திய அரசு முன்மொழிகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.

வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் மத்திய அரசு விரிவான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

பயோ-ஃபார்மா துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு வர அண்மையில் 350க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சீர்திருத்த நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து வருகின்றன என்றார்.

இந்தியாவின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் விரைவான வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

இதர சிறப்பம்சங்கள்

நாடெங்கும் 5 மருத்துவ மையங்கள் உருவாக்கப்படும்.

தனியார் துறையோடு இணைந்து நாடெங்கும் மருத்துவ மையங்கள் உருவாக்கப்படும்.

ஆயுர்வேத மருத்துவத்துக்கு நாடெங்கும் 3 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.

சேவைத் துறையில் இந்தியா உலக அரங்கில் முன்னணியில் திகழ புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.

மருத்துவ துறை சார்ந்த தொழில்நுட்ப கல்வி, சிறப்பு மருத்துவத் துறை நிபுணர்களை உருவாக்க திட்டம்

திட்டத்தின் மூலம் அடுத்த ஓராண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட் வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்

நாட்டில் 5 பல்கலை நகரங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.